உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் கடந்த 4ஆம் தேதி ஒரு இளம் பெண் வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தார் . அப்போது ஒரு வாலிபர் அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றதும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்குள் இழுத்திருக்கிறார்.
அதற்கு அந்த பெண் மறுக்கவும் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை தூக்கிச் சென்று புதர் பக்கம் சென்றிருக்கிறார். பின்னர் அந்த பெண்ணை தாக்கி ஆடைகளை அவிழ்த்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதில் சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண், முதலில் முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதை கேட்டதும் சரி என்ற வாலிபர் முத்தம் கொடுக்க முயன்றிருக்கிறார்.
முத்தம் கொடுக்க முயன்ற போது வாலிபரின் உதட்டை கடித்து சிதைத்திருக்கிறார் அந்த இளம்பெண். இதில் அந்த வாலிபர் கதறி துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளம் பெண்ணை மீட்டு உள்ளனர். வாலிபரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த வாலிபரை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.