தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தெய்வேந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் ராசு மகன் முருகன்(38). இவர் திமுக ஒன்றிய கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் முருகன், குமணன்தொழு பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் பாரின் ஏலத்தொகையை கட்டவில்லை. இதனால் பாருக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும், அவருக்கு கடன் பிரச்சினைகளும் இருந்து வந்துள்ளது.
இதனால் மனமுடைந்து போன முருகன், தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடும்பாறை போலிசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளது.
மேலும் , இந்த சம்பவம் குறித்து முருகனின் மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.