STR: நல்ல ஓப்பனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் மிஸ்ஸான சிம்புவின் படங்கள்… பத்து தல தான் நம்பர்…

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அதிக எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் கிடைத்தது.

ஆனாலும், முதல் நாளில் கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் டல்லடிக்க தொடங்கியுள்ளது.

இதேபோல் சிம்புவின் கேரியரில் நல்ல ஓபனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த டாப் 5 படங்களை பார்க்கலாம்.

தொட்டி ஜெயா

சிம்பு நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. VZ துரை இயக்கிய இந்தப் படத்தில் சிம்பு ரவுடி கெட்டப்பில் நடித்திருந்தார். படம் ரிலீஸாகும் முன்பே ராவான ரவுடி லுக்கில் சிம்புவின் போஸ்டர்கள் வைரலாகின. இதனால் முதல் நாளில் நல்ல ஓபனிங் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கியது. சிம்புவுக்கு ஜோடியாக கோபிகா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

 ஏமாற்றிய காளை

ஏமாற்றிய காளை

அதேபோல், வித்தியாசமான ஹிப்பி ஹேர் ஸ்டைலில் சிம்பு நடித்திருந்த படம் காளை. 2008ம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கு தாறுமாறான எதிர்பார்ப்பு இருந்தது. தருண் கோபி இயக்கிய இந்தப் படம் சிம்புவின் கேரியரில் மாஸ் கம்பேக் கொடுக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், முதல் நாளில் சூப்பரான ஓபனிங் உடன் ரிலீஸான காளை, அடுத்தடுத்த நாட்களில் மரண அடி வாங்கியது.

 ரீமேக் ஒஸ்தி

ரீமேக் ஒஸ்தி

கில்லி, தில், தூள் என பட்டையக் கிளப்பிய இயக்குநர் தரணி, முதன்முறை ஒஸ்தி படம் மூலம் சிம்புவுடன் இணைந்தார். பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த தபங் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. தமனின் இசையில் பாடல்கள் ஹிட்டானதால், முதல் நாளில் சிறப்பான ஓபனிங் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு ஒஸ்தி என்ற படம் ரிலீஸானதுக்கான தடமே இல்லாமல் தியேட்டரை விட்டு வெளியேறியது.

 அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

சிம்புவுக்கு கம்பேக் கொடுத்து தூக்கி விட்டதில் கெளதம் மேனனும் ஒருவர். விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் ஹிட் அடித்த சிம்பு – கெளதம் கூட்டணி, அடுத்து அச்சம் என்பது மடமையடா படத்தில் இணைந்தது. ஏஆர் ரஹ்மானும் இப்படத்திற்காக சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். ஆனால், சிம்புவின் ரஜினிகாந்த் அவதாரம் எடுபடாமல் போக முதல் வாரத்தோடு சைலண்ட் மோடுக்கு போனது இந்தப் படம்.

 இந்த வரிசையில் பத்து தல

இந்த வரிசையில் பத்து தல

இப்போது இந்த வரிசையில் பத்து தல திரைப்படமும் இடம் பிடித்துவிடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாடு, வெந்து தணிந்தது காடு என கம்பேக் கொடுத்த சிம்பு, பத்து தல படத்தில் மாஸ் காட்ட தவறவிட்டார் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். முதல் நாளில் தரமான ஓபனிங் உடன் வெளியான பத்து தல, பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.