அமெரிக்காவை பார்த்து சிரிக்கும் உலக நாடுகள்: டிரம்ப் சாடல்| The world is already laughing at us: Donald Trump’s Fierce Attack On Biden

நியூயார்க்: ” ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் திரும்ப பெறப்பட்டதை பார்த்து உலக நாடுகள், நம்மை பார்த்து சிரிக்கின்றன” என, முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் 76, கடந்த 2017 – 21 வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தார். இங்கு பெரும் தொழிலதிபராக மக்கள் மத்தியில் அறிமுகமான டிரம்ப் 2006ல் ‘லேக்தஹோய்’ என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்அறையில் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் 44 என்பவர் 2016ல் குற்றஞ்சாட்டினார்.

பின்னடைவு

அப்போது அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த டிரம்புக்கு இது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் எதுவும் பேசாமல் இருக்க டொனால்டு டிரம்ப் தனக்கு 1 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக ஸ்டார்மி டேனியல்ஸ் மீண்டும் குற்றஞ்சாட்டினார். இந்த பணத்தை முன்னாள் அட்டர்னி மைக்கேல் கோஹன் வாயிலாக அவர் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

அவப்பெயர்

இதை மைக்கேல் கோஹன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவர் 2018 – 20 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் முன்னாள்அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி அல்வின் பிராக் சமீபத்தில் கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தார். இதன் வாயிலாக கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் அதிபர் என்ற அவப்பெயரை டிரம்ப் பெற்றுள்ளார். இது தொடர்பாக நேற்று விசாரணைக்கு டிரம்ப் ஆஜராக அவரது வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புளோரிடாவில் வசிக்கும் டொனால்டு டிரம்ப் தனி விமானம் வாயிலாக நேற்று முன்தினம் நியூயார்க் சென்றார். தனக்கு சொந்தமான டிரம்ப் டவரில் தங்கிய இவர் பலத்த பாதுகாப்புக்கு நடுவே மன்ஹாட்டன் நீதிமன்றம் சென்றார். அங்கு விசாரணைக்கு முன்பாக போலீசாரின் காவலுக்கு கொண்டு வரப்பட்டார்.

பின் நீதிபதி அல்வின் பிராக்கு முன்னிலையில் நேற்றிரவு இந்திய நேரப்படி 11:00 மணியளவில் அவர்ஆஜரானார். அடர் நீல நிறத்தில் கோட்டும் சிவப்பு நிற டையும் அணிந்து வந்த டிரம்ப் பதற்றமாக காணப்பட்டார். நீதிமன்ற விதிகளின்படி முன்னதாக டிரம்பின் கைரேகையை பதிவு செய்த நீதிமன்ற ஊழியர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர். வழக்கு விசாரணையின் போது ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. பின் இவை தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

மறுப்பு

அப்போது டிரம்ப் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து கூறியதாவது: ஆபாச பட நடிகைக்கு நான் பணம் ஏதும் கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தான் எந்தவொரு தவறும் இழைக்கவில்லை எனக்கூறினார்.

இதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து, எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காமல், டிரம்ப்பை அங்கிருந்து கிளம்பி செல்ல அனுமதி வழங்கினார். இதன் பின்னர், டிரம்ப்பும் கிளம்பி சென்றார்.

பைடன் மீது சாடல்

latest tamil news

பிறகு புளோரிடாவில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை. ஒரு போதும் நினைத்தது இல்லை. நான் செய்த ஒரே தவறு என்னவென்றால், ‘அமெரிக்காவை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து, பயமின்றி நாட்டை காத்தது தான்’. அமெரிக்க வரலாற்றில், இருள் சூழ்ந்த பக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். நாடு நரகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. நமது எல்லைகளை திறந்து விட்டதை பார்த்தும், ஆப்கனில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டதை பார்த்தும் உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்து சிரிக்கின்றன. இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.