பிரபல நடிகர் சரத்பாபு (71) கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
80களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் சரத்பாபு தற்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து மேலும் புகழ் பெற்றார்.
இவர் முள்ளும் மலரும், அண்ணாமலை, வேலைக்காரன், முத்து என ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இதனால் ரசிகர்களால் சரத்பாபு நன்கு அறியப்பட்டார். 1974இல் பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் சரத்பாபு குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 71 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத்பாபு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கடந்த 20ஆம் தேதி மோசமாக தொடங்கியது. தற்போது கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது சிறுநீரகம், நுரையீரல், உடல் உறுப்புகள் நோய் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in