Thalapathy 68: தளபதி 68 அப்டேட்..சூசகமாக சொன்ன பிரபல ஹீரோ..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்

​லியோவாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் , மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடுமையான சூழலுக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகின்றது

​முடிவுவிஜய்யின் கடைசி இரண்டு படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றி படம் என சொன்னாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே லியோ படத்தை விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற விஜய் முடிவெடுத்து உழைத்து வருகின்றார். அதன் காரணமாகவே இப்படத்தில் தன்னை லோகேஷிடம் முழுவதுமாக ஒப்படைத்துள்ளார் தளபதி. எனவே மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் அம்சங்களை சேர்த்திருந்த லோகேஷ் இம்முறை தன் ஸ்டைலில் லியோ படத்தை உருவாக்கி வருகின்றார்

​திட்டம்சுமாரான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்களே வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. அவ்வாறு இருக்கையில் லியோ திரைப்படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூலை எட்ட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் துவங்கும் முன்பே தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை பெற்று தந்தது லியோ. அந்த அளவிற்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கின்றது. எனவே படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இப்படத்தின் வசூல் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் புது உச்சத்தை தளபதி அடைவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி சோலோவாக வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

​தளபதி 68விஜய்யின் லியோ படத்தின் படப்பிடிப்பே முடிவடையாத நிலையில் அடுத்த படத்தை பற்றிய பேச்சு தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதாவது வாரிசு படத்தை அடுத்து விஜய் மேலும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என செய்திகள் பரவின. வீர சிம்பா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் இயக்கத்தில் விஜய் தன் 68 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் சூப்பர் குட் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த நடிகர் ஜீவாவிடம் ரசிகர் ஒருவர் தளபதி 68 அறிவிப்பு எப்போது வரும் என கேட்டுள்ளார். அதற்கு ஜீவா, விரைவில் வரும் என பதிலளித்துள்ளார். இதன் மூலம் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தான் தயாரிக்கிறது என்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். விஜய்யை வைத்து பூவே உனக்காக, ஷாஜஹான் திருப்பாச்சி, ஜில்லா என பல வெற்றிப்படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.