Dil Raju: 25 வருடத்தில் இப்படியொரு தோல்வி.. சமந்தாவால் புலம்பும் 'வாரிசு' பட தயாரிப்பாளர்.!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் சமந்தா. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் அண்மையில் ‘சாகுந்தலம்’ படம் வெளியானது. எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்தப்படம் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்தப்படத்தின் தோல்வி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது..

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
சினிமாவில் பிசியாக இந்த போதே சமந்தா திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தனர். திடீரென சமந்தா, நாக சைதன்யா இருவரும் மனமொத்து பிரிவதாக தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் சமந்தா. இந்நிலையில் தான் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய்க்காக தொடர் சிகிச்சையும் எடுத்து வந்தார். இதனிடையில் அண்மையில் சமந்தா நடிப்பில் ‘சாகுந்தலம்’ படம் வெளியானது. பலமுறை தள்ளி வைக்கப்பட்ட இந்தப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசானது.

துஷயந்தாவாக தேவ் மோகனும், அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா குழந்தை நட்சத்திரமாகவும் அறிமுகமான இந்தப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவானது. அண்மையில் 3டியில் ரிலீசான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது.ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் ரூ. 10 மட்டுமே வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

Trisha: ‘லியோ’ படக்குழு கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்: அமர்களமாய் பிறந்தநாளை கொண்டாடிய திரிஷா.!

இந்நிலையில் ‘சாகுந்தலம்’ படத்தின் தோல்வி குறித்து பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, கடந்த 2017 ஆம் ஆண்டு எனக்கு சிறப்பான வருடமாக அமைந்தது. நான் தயாரித்த 50 படங்களில் 4 அல்லது 5 படங்கள் வியாபார ரீதியாக எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் என்னுடைய 25 வருட திரை வாழ்க்கையில் ‘சாகுந்தலம்’ படம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப்படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தேன். ஆடியன்ஸ்க்கு பிரிந்திருந்தால் ப்ளாக் பஸ்டர் ஆக்குவார்கள். எங்கு தவறு நடந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் தான் ரிலீசுக்கு நான்கு நாட்கள் முன்பே பிரிவியூ ஷோவில் திரையிட வைத்தேன். படம் ரிலீசான முதல் நாளே கலவையான விமர்சனங்கள் வந்தே போதே நான் தோல்விக்கு தயாராகிவிட்டேன் என தெரிவித்துள்ளார் தில் ராஜு. இவர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தினை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leo: தளபதி குறித்து ஒத்த வார்த்தை சொன்ன ‘லியோ’ பட நடிகர்: குஷியான விஜய் ரசிகாஸ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.