\"5 மணி நேரம் தான் டைம்!\" உக்ரைனில் திடீரென தகர்க்கப்பட்ட அணை.. பக்கத்தில் அணுமின் நிலையம் வேற

மாஸ்கோ: உக்ரைன் போர் இப்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், தெற்கு உக்ரைனில் இருக்கும் முக்கிய அணை ஒன்று இதில் சிக்கியுள்ளது. இதனால் சில மணி நேரத்தில் ஒட்டுமொத்த நகரமே மூழ்கும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டிற்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர ஆர்வம் காட்டி வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா திடீரென போரை ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் உண்மையில் இதில் ரஷ்யாவின் கையே ஓங்கியிருந்தது.. போரைத் தொடங்கிய சில நாட்களில் பல பகுதிகளில் ரஷ்யா அடுத்தடுத்து கைப்பற்றியன. இதனால் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

உக்ரைன்: இருப்பினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் படைகள் உறுதியாகச் சண்டையிட்டதால் போர் தொடர்ந்தது. அதன் பின்னர் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கின. இதன் மூலம் ரஷ்யா தாக்குதலை உக்ரைன் சமாளிக்க முடிந்தது. இதனால் சில வாரங்களில் முடிய வேண்டிய போர் பல மாதங்களாக நீடித்தது. இப்போது ஓராண்டிற்கு மேலாக உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இடையில் சில மாதங்கள் போரில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. இதனால் அப்படியே சண்டை ஓய்ந்துவிடும் என்றெல்லாம் சிலர் எதிர்பார்த்தனர். இதற்கிடையே இப்போது தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் தான் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இப்போது முக்கியமான அணை ஒன்று உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்: தெற்கு உக்ரைனில் உள்ள நகரம் நோவா ககோவ்கா.. இதற்கு உக்ரைனுக்குச் சொந்தமான கிரீமியா பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைக் கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடைய பகுதி என்று கூறி ஆக்கிரமித்தது. இந்த நகரத்தில் அமைந்துள்ள ககோவ்ஸ்கா அணை தான் தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த நகரமே நீரில் மூழ்கும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நகரின் மேயர் விளாடிமிர் லியோன்டிவ் கூறுகையில், “ஏற்கனவே நகரத்திற்குள் தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. விரைவில் நகரம் முழுவதுமாக மூழ்கிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. இந்த நகரில் வசிப்போரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே சுமார் 300 பேரை நீங்கள் வெளியேற்றிவிட்டோம்” என்றார்.

உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ககோவ்கா அணை இதில் சிக்கியுள்ளது. யார் இந்த அணையை யார் உடைத்தனர் என்பது குறித்த இப்போது வரை உறுதியான தகவல் இல்லை. இருப்பினும், உக்ரைன் ரஷ்யா என இரு நாடுகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். யார் உண்மையாக இதை உடைத்தனர் என்பது குறித்து இப்போது வரை தெரியவில்லை.

இதற்கிடையே அடுத்த ஐந்து மணி நேரத்தில் தண்ணீர் அபாய அளவை எட்டும் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமிய தீபகற்பத்திற்கு நீர் விநியோகத்தைத் துண்டிக்க உக்ரைன் செய்த நாச வேலை தான் இது என்று ரஷ்யா சாடியுள்ளது. மறுபுறம் உக்ரைன் இது ரஷ்யாவின் திட்டம் என்று சாடியுள்ளது.

ரஷ்ய ராணுவம் தான் அணையை உடைத்துள்ளதாக உக்ரைன் விமர்சித்துள்ளது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகிறது. உண்மை என்ன என்று இதுவரை தெரியவில்லை. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் அணையில் இருந்து வெளியேறும் நீர், அதன் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அணுமின் நிலையம்: உக்ரைன் தெற்கே உள்ள ஜாபோரிஜியா அணுமின் நிலையம், இந்த ககோவ்ஸ்கா அணையில் இருந்து எடுக்கும் நீரைத் தான் அதன் உலைகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தி வந்தது. இப்போது அணை உடைக்கப்பட்டுள்ளதால் அணுமின் நிலையம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், தற்போது வரை அணுமின் நிலையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.