Asia Cup 2023: நினைத்ததை சாதித்த இந்தியா… ஆசிய கோப்பை நடக்கும் இடங்கள் அறிவிப்பு!

Asia Cup 2023: ஆசிய கோப்பை குறித்து, ஆசிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 2023 வரை நடைபெறும் என்றும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் உயரடுக்கு அணிகள் மொத்தம் 13 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தம் 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள் என்றும் பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிப்பவர்கள் Super Four சுற்றுக்கு தகுதிபெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றிபெறுபவர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என தெரிகிறது.

இதில், நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் இந்த போட்டி கலப்பின மாதிரியில் நடத்தப்படும் என ஆசிய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கிறது. 

Asia Cup 2023 will be held from 31st August to 17th September 2023 and will see the elite teams from India, Pakistan, Sri Lanka, Bangladesh, Afghanistan, and Nepal, compete in a total of 13 exciting ODI matches.
The tournament will be hosted in a hybrid model with four matches… pic.twitter.com/uRs0vT7Ei7

— ANI (@ANI) June 15, 2023

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.