2023 கியா Seltos எஸ்யூவி அறிமுகமானது

இந்தியாவில் கியா மோட்டார் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட கியா Seltos எஸ்யூவி 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஜூலை 14 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு, விற்பனைக்கு ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இந்திய சந்தையில் கடும் போட்டியாளர்களை செல்டோஸ் எதிர்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் கியா மோட்டார் 2019 ஆம் ஆண்டு நுழைந்த பொழுது அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் 5 லட்சத்துக்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடுத்தர சி எஸ்யூவி பிரிவில் இந்தியாவின் 30 சதவித சந்தை பங்களிப்பை செல்டோஸ் பெற்றுள்ளது.

2023 கியா Seltos Facelift

செல்டோஸ் இன்டிரியர் அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு டிசைன் வழங்கப்பட்டு புதிய இரட்டை பிரிவு கொண்ட டிஸ்பிளே அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, ஃபேஸ்லிஃப்ட் பனோரமிக் சன்ரூஃப்,  17 விதமான பாதுகாப்பு சார்ந்த ADAS 2.0 பாதுகாப்பு அம்சம், டூயல்-ஜோன் ஏசி கட்டுப்பாடு மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ரியாட் ஆட்டோ  ஆகியவற்றை பெறுகின்றது.

Seltos ஃபேஸ்லிஃப்ட்  காரின் அடிப்படையில் மாற்றங்களை பெற்றதாக வரவுள்ள காரில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட், ரன்னிங் விளக்குகள், முன் பம்பர், அதிக பாடி கிளாடிங் மற்றும் கூடுதல் பாடி-கலர் இன்செர்ட்டுகளை, பனி விளக்கு ஹவுஸிங்கில் பெறுகிறது. பக்கவாட்டில் பெரிதாக மாற்றமில்லை, பின்புறத்தில் டெயில் லைட், பம்பர் ஆகியவற்றை மேம்படுத்தியிருக்கின்றது

2023 செல்டோஸ் என்ஜின் விபரம்

டாப் மாடலாக 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய Seltos காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும்.

2023 Kia Seltos facelift Price

ஜூலை 14 ஆம் தேதி முதல் 2023 கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவு துவங்கப்பட உள்ளதால், விலை ஜூலை இறுதியிலும் டெலிவரி ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.