INDvsWI: திலக் வர்மா ஆடியதால் கவுரமான ஸ்கோருக்கு கரையேறிய இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கயானா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்தப் போட்டியிலும் சுப்மன் கில் 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரரான இஷான் கிஷன் 27 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் 1 ரன் எடுத்தபோது தேவையில்லாமல் ரன் அவுட்டானார். அடுத்து முன்னணி வீர ர்கள் அவுட்டானதால் இந்திய அணி அப்போது சிக்கலில் இருந்தது. இந்த போட்டியிலாவது சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து தனக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பையும் வீணடித்தார். ஆனால் தனி ஆளாக களத்தில் நிலைத்து நின்று விளையாடிய திலக் வர்மா 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 24 ரன்கள் எடுத்தார்.

 (@CricCrazyJohns) August 6, 2023

கடைசி ஓவரில் ரவி பிஸ்னோய் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 1 பவுண்டரி அடித்து கொடுத்து கடைசி ஓவரில் 13 ரன்களும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 152 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அதிகபட்சமாக அல்ஜாரி ஜோசப், அகெல் ஹூசைன் மற்றும் ரொமாரியோ செஃபர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.