மக்களின் தேவை குறித்து படிக்க வேண்டும்: இளைஞரணி நிர்வாகிகளுக்கு உதயநிதி உத்தரவு!

அமைச்சரும்

இளைஞரணிச் செயலாளருமான

பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பிய நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது அணி நிர்வாகிகளுக்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள், திராவிட இயக்க சிந்தனையாளர்களை வைத்து அவ்வப்போது பயிற்சி பாசறைகளை நடத்தி அரசியல் பயிற்சி அளித்து வருகிறார்.

திமுகவில் மற்ற அணிகளை விட இளைஞரணி எப்போதும் ஆக்டிவாக இருக்கும். இளைஞர்கள் இருக்கும் அணி என்பது மட்டுமல்லாமல் அதிகாரத்துக்கு நெருக்கமான அணியாகவும் இருந்து வந்துள்ளது. திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி இருந்த போது அவரது மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தார். ஸ்டாலின் திமுக தலைவராக இருக்கும் போது அவரது மகன் உதயநிதி அந்த அணியின் செயலாளராக உள்ளார்.

மதுரை அதிமுக மாநாட்டில் சர்ச்சை பாடல் – கோவை திமுக மகளிர் அணி சார்பில் பரந்த புகார்

எனவே திமுக இளைஞரணி நிர்வாகிகள் எப்போதும் கட்சிக்குள் செல்வாக்கு மிக்கவர்களாகவே வலம் வருகின்றனர். இந்நிலையில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

மாநாட்டு பணிகளில் நிர்வாகிகள் வேகம் காட்ட வேண்டும் என்பதற்காக உதயநிதி மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 5 நாள்களில் 16 மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ள உதயநிதி நிர்வாகிகளுக்கு எட்டு பக்க அளவில் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும், மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும், அவர்களுக்குப் பயன்படும்படி இன்னும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது” என்று உதயநிதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.