என் கனவுகள் வீழாது – ஸ்டார் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது

கவின் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த டாடா படம் வெற்றி பெற்றது. அடுத்து ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து அவர் நடிக்கும் ஸ்டார் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிய இளன் இயக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை … Read more

karthi: வில்லனே இல்லாத கார்த்தி படம்.. 96 பட இயக்குநரின் வித்தியாச முயற்சி!

சென்னை: நடிகர் கார்த்தி -ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜப்பான் படம் வரும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமியுடன் தன்னுடைய 26வது படத்திற்காக இணைந்துள்ளார் நடிகர் கார்த்தி. இந்தப் படங்களை தொடர்ந்து 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கார்த்தி. வில்லனே இல்லாத கார்த்தி -பிரேம்குமார் காம்பினேஷன்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்

சென்னை: சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது சென்னை எம்.பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக நிலுவையில் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம்: … Read more

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் கருட சேவை நாளில் திருமலைக்கு பைக்குகள் வர தடை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளான செப்டம்பர் 22-ம் தேதி, திருமலைக்கு பைக்குகள் வர தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு தர்மா ரெட்டி கூறியதாவது: செப்டம்பர் 18-ம் தேதி … Read more

திடீரென கூடும் நாடாளுமன்றம்: பாஜக அரசு போடும் திட்டங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பிரதமரை பேச வைப்பதற்காக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றது. அந்தக் கூட்டத்தொடரில் மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் … Read more

Nayanthara: சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா..முதல் போஸ்டே செமையா இருக்கே..!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக,பிரபல சமூல வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர் தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வர் நடித்த … Read more

நிலவில் பிளாஸ்மா உள்ளதைக் கண்டுபிடித்த விக்ரம் லேண்டர்

பெங்களூரு நிலவில் தென் துருவப்பகுதியில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.. நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரை, விக்ரம் லேண்டர் குழந்தையைப் போல் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் … Read more

காவிரி நீர் திறப்பை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம்| Protest in Karnataka against release of Cauvery water

மாண்டியா, தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, காவிரி பாயும் மாவட்டங்களில் விவசாய அமைப்புகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன. புது டில்லியில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகத்துக்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம், 15 நாட்களுக்கு நீர் திறக்கும்படி கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி, கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படப்படுகிறது. இதை கண்டித்து, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. … Read more

பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் சுகன்யா

பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன்பிறகு கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். சமீபகாலமாக அவ்வப்போது சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் சுகன்யா, தற்போது டிஎன்ஏ என்ற ஒரு மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் சூழலுக்கான ஒரு பாடலை எழுதி, பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சுரேஷ் பாபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சரத் என்பவர் இசையமைத்துள்ளார். இது … Read more