'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி 4-வது வெற்றி

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 11-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) 30-28, 29-27, 16-25, 25-21 என்ற செட் கணக்கில் வருமான வரி அணியை தோற்கடித்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய ஐ.ஓ.பி. அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். வருமான வரி அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 25-13, 25-17, 25-15 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்து தொடர்ச்சியாக 5-வது வெற்றியை தனதாக்கியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.