Virat Kholi Records: சச்சின் ரெக்கார்டுகளை வேட்டையாடும் கோலி..!

கிரிக்கெட்டின் நவீன கால மாஸ்டர் பிளாஸ்டர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 26,000 ரன்களை குவித்து மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த சாதனையை மிக வேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்று சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார் அவர். வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு 510 போட்டிகளில் 566 இன்னிங்ஸ்களில் 25923 ரன்கள் குவித்திருந்த விராட் கோலி, இந்த போட்டியில் சிக்சருடன் இந்த மைல்கல்லை எட்டினார். நடப்பு உலக கோப்பை தொடரில் சூப்பர் பார்மில் இருக்கும் அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 85 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் அணிக்கு எதிராட அதிரடியாக விளையாடி 103 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த உலக கோப்பையில் விராட் கோலியின் முதல் சதம் மற்றும் சேஸிங்கில் இதுவரை உலக கோப்பையில் சதமடிக்கவில்லை என்ற ஏக்கத்தையும் போக்கியுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த சதம் ஒருநாள் போட்டியில் அவரின் 48வது சதமாக பதிவாகியுள்ளது. இப்போது ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 49 சதங்களுடன் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். எதிர்வரும் உலக கோப்பை போட்டிகளிலேயே இரண்டு சதங்களையும் அடித்து சச்சினின் இந்த சாதனையையும் முறியடிக்க விராட் கோலிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார். 

அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் என அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 34,357 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் இலங்கையின் குமார சங்ககாரா உள்ளார். அவர் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 28,016 ரன்கள் குவித்துள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் மூன்றுவிதமான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து 27,483 ரன்கள் குவித்துள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விராட் கோலி, இந்த சாதனைகளையும் முறியடிக்கும் இடத்தில் இப்போதைக்கு இவர் இருக்கிறார்.   

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

1. சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகளில் 34,357 ரன்கள்
2. குமார் சங்கக்கார – 594 போட்டிகளில் 28,016 ரன்கள்
3. ரிக்கி பாண்டிங் – 560 போட்டிகளில் 27,483 ரன்கள்
4. விராட் கோலி – 511 போட்டிகளில் 26,026 ரன்கள்
5. மஹேல ஜெயவர்தன – 652 போட்டிகளில் 25,957 ரன்கள்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.