2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் கியா கார் மற்றும் எஸ்யூவிகள்

இந்தியாவில் கியா நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு சொனெட், கார்னிவல், EV9, EV3 மற்றும் கியா கிளாவிஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே, சொனெட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருவதனால் ஜனவரி முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்படலாம்.

2024 Kia Sonet

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கியா சொனெட் எஸ்யூவி மாடல் ADAS லெவல் 1 பாதுகாப்பு நுட்பத்தை பெற்று தொடர்ந்து 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று என்ஜின்களும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மீண்டும் துவக்க நிலை வேரியண்டில் 5-ஸ்பீடு மேனுவல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னோக்கி மோதவதனை முன்கூட்டியே எச்சரிக்கையும், விபத்தை தவிர்க்க உதவும் வகையில் கார், பாதசாரி மற்றும் சைக்கிள் ஓட்டுபவர், லேன் கீப் அசிஸ்ட், லேன் ஃபாலோ அசிஸ்ட், லேன் மாறுபாடு எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், ஓட்டுனர் கவன குறைவை எச்சரிக்கை,  வாகன புறப்படுதலை அறிந்து எச்சரிக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி முதல் ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் விலை ரூ.8 லட்சத்தில் ஆரம்ப விலை அறிவிக்கப்படலாம்.

kia sonet suv

2024 Kia Carnival

7,9, மற்றும் 11 என மாறுபட்ட இருக்கை வகையை பெற்ற 2024 கியா கார்னிவல் எம்பிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் பண்டிகை காலத்துக்கு முன்பாக ரூ.27 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

புதுப்பிக்கபட்ட இன்டிரியர், மேப்பட்ட K4 டிசைன் அம்சத்தை பெற்றுள்ள மாடல், சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டமும் துவங்கப்பட்டுள்ள நிலையில், கார்னிவல் மாடலில் 200bhp மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறக்கூடும்.

2024 Kia Carnival car

Kia EV9

2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த கியா EV9 எஸ்யூவி மாடலில் 77.4 Kwh மற்றும் 99.8kWh, 800V பேட்டரி அமைப்பினை கொண்டு சிங்கிள் சார்ஜில் WLTP மூலம் 563km கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான பாக்ஸ் வடிவ டிசைன் அமைப்பினை பெற்ற இந்த மாடலில் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரு ஆப்ஷனை பெற்று இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படலாம். 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற EV9 விலை ரூ.1 கோடி என துவங்கலாம்.

kia ev9

Kia Clavis

கியா இந்திய சந்தையில் லைஃப்ஸ்டைல் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷடுடன் கூடிய கிளாவிஸ் எஸ்யூவி மாடலை 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம்.

Kia EV3

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் 2024ல் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் நிலையில் செல்டோஸ் அடிப்படையில் EV3 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் 50-70 kWh பேட்டரி பெற்று சிங்கிள் சார்ஜில் 350-500 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.

2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் கியா EV3 விற்பனைக்கு ரூ.25 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

kia ev3 suv rear

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.