கூகுள் பார்டு மூலம் நொடியில் 3டி புகைப்படங்களை உருவாக்கலாம்…!

தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு இப்போது டெக்னாலஜி உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பெரு நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், சாட்ஜிபிடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் என்னவெல்லாம் சாத்தியப்படுத்த முடியும் என்பதை ஒவ்வொன்றாக மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் கூகுள் பார்டு செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப்பட்ட அம்சத்தை இப்போது மக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக கொடுத்துள்ளது. இதனை நீங்கள் ஜிமெயில் மட்டும் இருந்தால் போதும் கூகுள் பார்டு ஏஐ அம்சத்தை அணுக முடியும்.

உங்களுக்கு வேண்டுமான புகைப்படங்களை உங்கள் கற்பனையில் இருப்பது போல் வார்த்தையில் எழுதிக் கொடுத்தால், அதனை அப்படியே புகைப்படமாக உங்கள் கண் முன்னே சில நொடிகளில் கொண்டு வந்து கொடுக்கும். கற்பனை கதாப்பாத்திரங்களுக்கு கூகுள் பார்டு இப்போது உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். தமிழ், ஆங்கிலம் என 40க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படும் கூகுள் பார்டு இமேஜ் கிரியேட்டர், அசாத்தியமான புகைப்படங்களை எல்லாம் நொடிப் பொழுதில் உருவாக்கி கொடுத்துவிடுகிறது.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சரியான வார்த்தைகளை கூகுள் பார்டுக்கு சொல்ல வேண்டும். அது உங்களின் வார்த்தைகளுக்கு ஏற்ப புகைப்படத்தை உருவாக்கி கொடுக்கும். அந்த புகைப்படங்களில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் வேறு வார்த்தைகளை பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்கி கொள்ள முடியும். இணைய பக்கங்களில் எங்கு இருந்தும் புகைப்படங்களை எடுத்துக் கொடுக்காது. அதுவே உங்கள் எண்ணத்தில் இருக்கும் புகைப்பட கற்பனைக்கு உருவம் கொடுக்கும். 

ஏற்கனவே கூகுள் ஜெமினி, கூகுள் ஜெமினி புரோ ஆகிய அம்சங்களையெல்லாம் இதில் கூகுள் சேர்த்திருக்கிறது. இவை சில நாடுகளில் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அங்கு கிடைக்கும் சோதனை முடிவுகளின் அடிப்படையில் அப்டேட் வெர்சனைகளை கூகுள் கட்டணத்துடன்வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இந்த கூகுள் பார்டு அப்டேட்டில், Jpeg, PNG மற்றும் SVG உட்பட பல்வேறு வடிவ புகைப்படங்களை நீங்கள் உருவாக்கி கொள்ள முடியும். 3டி புகைப்படங்களும் உருவாக்கலாம். ஆனால் அது இன்னும் அப்டேட்டில் இருப்பதாக கூகுள் பார்டே தெரிவிக்கிறது. இந்த அப்டேட்டில் இருக்கும் கூடுதல் அம்சம் என்னவென்றால், உங்களுக்கு தேவையான கலர் கரெக்ஷன்களை கூட சொல்லி, அதற்கேற்ப புகைப்படங்களை பெற்றுக் கொள்ள முடியும். கற்பனைகளை நிஜமாக்கும் கூகுள் பார்டு ஏஐ தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களை பயன்படுத்தி பாருங்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.