2024 இல் தேர்தல்களை நடாத்துவதற்காக பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

இவ்வாண்டில் தேர்தல்களை நடத்துவதற்காக பத்து பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இது தொடர்பாக தொடர்ந்தும் குறிப்பிடுகையில்;

2024ஆம் ஆண்டில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்காக மாத்திரம் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வாறே அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் வலுவற்றது என்றும் 2025ஆம் ஆண்டில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களுக்காக அச்சிபாரிசுகள் வலுவானதாக அமையும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் கொண்டுசெல்லப்படும் நிதியில், 2024ஆம் ஆண்டிற்காக வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் ஊடாக பத்து பில்லியன் ரூபா தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்கான செலவு அவ்வொதுக்கீட்டினுள் முகாமை செய்வதற்கு ஏற்படுவதாகவும் அமைச்சரவையினால் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக அவசியமான நிதி அரசாங்கத்தினால் நடாத்தப்படும் வரையறுக்கப்பட்ட நிதி யினுள்,2025ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க வேண்டியேற்படும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், 2025இல் தேர்தல்கள் இரண்டை நடத்துவதற்குத் பிரதானமாக 1948 ஆம் ஆண்டு17 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழு . (393 அத்தியாயம்) இற்கு அமைவாக நிருமாணிக்கப்படக்கூடிய மற்றும் 2354/06 இலக்க 2023-10-16 திகதிய வர்த்தமானி அறிவித்தலுக் கூடாக வெளியிடப்பட்ட விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் அவசியமாயின் குறித்த தேர்தல் சட்ட திருத்தத்திற்காக பாராளுமன்றத்தின் அனுமதிக்கேற்ப அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சரவையினால் மேலும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வினால் முன்வைக்கப்படும் அவ்விடயங்களின் அடிப்படையில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இவ்வுடன்பாட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.