பெங்களூரு : பெங்களூரு, ஜெயதேவா இதய மருத்துவமனை இயக்குனராக பணியாற்றியவர் டாக்டர் மஞ்சுநாத். ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவின் மருமகன். சமீபத்தில் மருத்துவமனை இயக்குனர் பதவியில் இருந்து, மஞ்சுநாத்தை, கர்நாடக அரசு விடுவித்தது.
மாநிலம் முழுதும் புகழ் பெற்ற அவரை, அரசியலுக்கு அழைத்து வர ம.ஜ.த., தலைவர்கள் முயற்சி செய்தனர். ஹாசன், பெங்களூரு ரூரல் தொகுதியில், போட்டியிட வைக்க முயற்சி நடந்தது. ஆனால், அரசியல் வேண்டாம் என்று, மஞ்சுநாத் கூறிவிட்டார்.
இந்நிலையில் மஞ்சுநாத்தை, பா.ஜ., மேலிட தலைவர்கள் சிலர், தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். @பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுங்கள்.
உங்களை வெற்றி பெற வைக்க வேண்டியது, எங்கள் பொறுப்பு. பிரதமர் மோடியின் அமைச்சரவையில், மத்திய அமைச்சராகும் வாய்ப்பும் கிடைக்கும்’ என்று கூறி உள்ளனர்.
‘எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். மாமனார் தேவகவுடா, குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டும்’ என்று, மஞ்சுநாத் கூறி உள்ளார்.
பெங்களூரு வடக்கு தொகுதியின் தற்போது எம்.பி.,யாக இருப்பவர் சதானந்த கவுடா. பா.ஜ., முன்னாள் முதல்வரான இவருக்கு, இம்முறை சீட் கிடைப்பது சந்தேகம் என்று சொல்லப்படுகிறது. இதனால், அந்த தொகுதிக்கு பா.ஜ.,வில், கடும் போட்டி நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement