Oneplus மொபைல் வச்சு இருக்கீங்களா? ரிட்டன் செய்து முழு பணத்தையும் திரும்ப பெறலாம்!

OnePlus நிறுவனம் கடந்த மாதம் தனது புது மொபைலான OnePlus 12Rஐ அறிமுகப்படுத்தியது. OnePlus 12R ஸ்மார்ட் போன் 256GB மற்றும் UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது என்று நிறுவனம் கூறியது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய பயனர்கள் அதன் வேகம் மற்றும் செயல்பாட்டில் குறைகள் இருப்பதாக தெரிவித்தனர்.  இதற்கு பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 12R மொபைலில் உள்ள தவறை ஒப்பு கொண்டது. UFS 4.0க்கு பதிலாக UFS 3.1 சேமிப்பகம் இந்த மாடல் போனில் இடம்பெற்று இருப்பதாக உறுதிப்படுத்தியது. ஒன்பிளஸ் 12R போன் அறிமுகத்தின் போது, டிரினிட்டி என்ஜின் என்ற புதிய மென்பொருள் உங்கள் ஃபோனின் நினைவகம் மற்றும் சேமிப்பகத்தை வேகமாகவும் சீராகவும் வைத்திருக்க உதவும் என்று தெரிவித்து இருந்தோம். இருப்பினும், பிழையின் காரணமாக இன்னும் UFS 3.1 தான் மொபைலில் உள்ளது என்று OnePlus தெரிவித்துள்ளது. 

OnePlus has apologised and clarified that both the variants of #OnePlus12R use UFS 3.1.

Increased speeds are because of Trinity Engine.

OnePlus has asked to contact CC, to those who have purchased.

Imo, it’s not good for a brand to make such mistakes.
What do you guys think? pic.twitter.com/LTkpDntqAC

— MrTechAuditor (@Mrtechauditor) February 12, 2024

இந்த தவறை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற, ஒன்பிளஸ் நிறுவன தலைவர் COO Kinder Liu, 256ஜிபி சேமிப்பக பதிப்பை வாங்கிய பயனர்கள் மார்ச் 16ம் தேதிக்குள் மொபைலை திரும்ப கொடுத்து முழு பணத்தையும் பெற்று கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.  இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ” எல்லோருக்கும் வணக்கம், பொறுமை காத்தமைக்கு நன்றி. எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழு இந்த விஷயத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  கடந்த சில நாட்களாக நீங்கள் கூறி வந்ததை கேட்டுள்ளோம். நீங்கள் OnePlus 12R 256GB வாங்கி இருந்தால், வாடிக்கையாளர் சேவை மையம் மூலம், மொபைலை கொடுத்துவிட்டு மார்ச் 16 2024 வரை பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது. 

UFS 3.1 மற்றும் UFS 4.0 இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், UFS 4.0 சேமிப்பகம் அதிக வேகமாகவும், திறன் கொண்டதாகவும் இருக்கும். அதே வேளையில் UFS 3.1 சற்று மெதுவாக இருக்கும். ஒன்பிளஸின் குறைந்த விலை கொண்ட மாடல்களில் இந்த UFS 3.1 சேமிப்பகம் இருக்கும். ஒன்பிளஸ் மொபைலில் தொடர்ந்து பல பிரச்சனைகள் வருவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு, சில மாடல் போன்களில் ஸ்கிரீனில் பச்சை நிற கோடுகள் வருவதாக குற்றசாட்டு எழுந்தது.  இதனை அருகில் உள்ள ஒன்பிளஸ் கடைகளில் கொடுத்து சரி செய்து கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.