விஜயதரணி பாஜக-வில் இணைந்ததில் எங்களுக்கு வருத்தமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜக-வில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறினார். மேலும், அவர் அங்காவது சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்ததோடு காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பைப் பெற்ற விஜயதரணி தனது தேவை குறித்து சட்டமன்ற குழு தலைவரிடமோ அல்லது அகில இந்திய தலைமையிடமோ […]