பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் பெல்லாரியை சேர்ந்தவரிடம் என்ஐஏ விசாரணை

பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் பெல்லாரியை சேர்ந்த நபரிடம் தேசிய‌ புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

பெங்களூருவில் உள்ள ‘ராமேஷ்வரம் கஃபே’ உணவகத் தில் கடந்த 1-ம் தேதி குண்டுவெடித்ததில் 10 பேர் காயமடைந் தனர். சக்தி குறைந்த குண்டை டிபன் பாக்ஸில் வைத்து டிஜிட்டல் டைமர் மூலம் வெடிக்க வைத்ததாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் சந்தேகிக் கப்படும் குற்றவாளி உணவகத்தில் நடமாடும் சிசிடிவி வீடியோ ஆதாரம் கிடைத்த போதும் அவரை கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

இதையடுத்து கர்நாடக அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உத்தரவிட்டது. இவ்வழக்கில் தேடப்படும் குற்றாவளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து பெங்களூரு, துமக்கூரு, பெல்லாரி, தார்வாட், மங்களூரு ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதில் சிசிடிவி வீடியோவில் இருக்கும் நபர் துமக்கூரு பேருந்தில் பயணிப்பது, பெல்லாரி சாலையில் நடந்து செல்வது போன்ற வீடியோக்கள் கிடைத்தன. இதையடுத்து அதிகாரிகள் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், பெல்லாரி துணிக்கடை வியாபாரி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பெல்லாரியில் முக்கிய குற்றவாளி ஒருவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தேசிய ஊடகங்களில், ‘கைதான நபரின் பெயர் ஷபீர். அவர் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி” என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த தகவலை மறுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை, ‘‘பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவா ளியை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. குண்டுவெடிப்பு நடந்த உணவகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் இருக்கும் நபரைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவரை கைது செய்யவில்லை. குற்றவாளி குறித்த தகவல் கிடைத்தால் 080 – 29510900, 8904241100 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.