போன் தொலைந்து போனாலும் கவலைப்படாதிங்க… இனி ஸ்விட்ச் ஆப் ஆனாலும் கண்டுபிடிக்கலாம்!

Find My Device, Offline Tracking: டெக் உலகில் நீண்ட காலமாக ஒரு தகவல் பரவி வருவது என்றால் அது இதுவாகதான் இருக்க வேண்டும். அது வேறொன்றும் இல்லை, இனி மொபைல்கள் தொலைந்து போய் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் எளிதாக ட்ராக் செய்யும் வசதி ஆண்ட்ராய்ட் 15 அப்டேட்டில் வரும் என்பதுதான். ஆப்பிளில் இந்த முக்கிய அம்சம் இருந்தாலும் இது எப்போதும் ஆண்ட்ராய்டுக்கு வரும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்த வகையில் அதுகுறித்து தற்போதும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்ட் 15இல் ஆப்லைன் டிவைஸ் ட்ராக்கிங் அம்சம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சம் ஆப்பிள் நிறுனவத்தின் Find My Network அம்சத்தை ஒத்தது என தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, பயனர்கள் தங்களின் சாதனைத்தை தொலைத்துவிட்டலோ அல்லது அது திருடுபோய்விட்டாலோ இணையத்தொடர்பு இல்லாவிட்டாலும் அதனை ட்ராக் செய்ய இயலும் என கூறப்படுகிறது. 

இது ப்ளூடூத் சிக்னலிங் மூலம் சாத்தியப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதாவது, இதன்மூலம் சாதனம் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தாலும் அதனுடன் தொடர்பில் இருக்கும் மற்ற சாதனங்கள் மூலம் அதனை கண்டறிந்து, மீண்டும் அதன் உரிமையாளரிடம் மீட்டு தர வழிவகை செய்யலாம் என கூறப்படுகிறது. தற்போது வரை தொலைந்து போன மொபைலை கூகுள் நிறுவனத்தின் Find My Device மூலம்தான் கண்டறிய முடியும்.

இருப்பினும், அதிலும் கூகுள் அறிவித்த சில மூன்றாம் தரப்பு ட்ராக்கர்ஸ் இன்னும் முழுமையாகவில்லை. இதனை கூகுள் தாமதப்படுத்துவதற்கான காரணம், ஆப்பிள் நிறுவனம் பிற தளத்திலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தவதற்காக கூகுள் இதில் பொறுமைக் காட்டுவதாக கூறப்படுகிறது. இது நிறைவேற்றப்பட்டால், Find My Device மூலம் நெட்வார்க்கை கண்டறிவது மட்டுமின்றி தனிநபர் விஷயத்திலும் பல முன்னேற்றம் காணப்படும் என தெரிகிறது.  

அதாவது, மூன்றாம் தரப்பு ட்ராக்கர்கள் தங்களின் இருப்பிடத்தை அவர்களின் அனுமதி இன்றி ட்ராக் செய்கிறார்கள் என்றால் அதனை பயனர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அப்டேட் வரும் என கூறப்படுகிறது. இது தனிநபர் பாதுகாப்பை வழங்கும். Find My Device மூலம் ஸ்விட்ச் ஆனில் இருக்கும் ஆண்ட்ராய்ட் சாதனங்கள் மற்றும் மற்ற OS சாதனங்களும் இணையத் தொடர்பில் இருந்தால் ட்ராக் செய்ய முடியும். 

தற்போது இந்த ஆப்லைன் ட்ராக்கிங் மூலம் இணையத் தொடர்பு இல்லாவிட்டாலும் பயனர்கள் சாதனங்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்துகொள்ளலாம். இது வரவிருக்கும் Google Pixel 9 ஸ்மார்ட்போனில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. Google Pixel 8 ஸ்மார்ட்போனிலும் இந்த அம்சம் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் திருட்டு என்பது அதிகமாக உள்ளது. எனவே, தற்போது விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் மட்டும் கிடைத்தாலும் வருங்காலத்தில் அனைத்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களுக்கும் பரவலாக்கப்படும். அந்த வகையில், இந்த தொழில்நுட்பம் இந்தியா போன்ற மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த நாடுகளிலும் எளிதாக தொலைந்த சாதனத்தை கண்டுபிடிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.