”அன்று ஜெயலலிதா, இன்று மோடி… கேள்வி கேட்கிறார்கள்; திமுக வாய் திறக்கவில்லை” – நிர்மலா சீதாராமன்

தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார். மேலவீதி மூல அனுமார் கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர் சிவகங்கை பூங்கா வரை வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை பார்த்து கையசைத்து ஓட்டு கேட்டார். இதற்காக வந்த நிர்மலா சீதாராமனுக்கு பாஜகவினர் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். அத்துடன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன்

பிரசார வாகனத்தில் இருந்தபடியே வழியில் இருந்த மூல அனுமார், கோதண்டராமர், பங்காரு காமாட்சி, காசிநாதர், கொங்ணேஷ்வர் உள்ளிட்ட கோயில்களை பார்த்து வணங்கினார். பின்னர் தேரடியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “தமிழகத்தில் பெரிய மாறுதல் ஏற்பட வேண்டும். மாறுதல் வேண்டும் என்பது மக்கள் மனதில் இருக்கிறது. தமிழகத்தில், உண்மைக்கு புறம்பாக நிறைய விஷயங்களை பேசி வருகிறார்கள்.

கச்சத்தீவு விஷயத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். அதை பற்றிய அம்சம் குறித்து மக்கள் பேச வேண்டும். விவாதம் செய்ய வேண்டும். கச்சத்தீவு பரம்பரை பரம்பரையாக மீன்வர்கள் மீன்பிடித்த இடம். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்ததால் தான் இன்றைக்கு வரை மீனவர்கள் பிரச்னை தீராமல் உள்ளது என்ற உண்மையை நம் அனைவரும் பேச வேண்டும். திமுகவை கேள்வி கேட்க வேண்டும்.

நிர்மலா சீதாராமன் ரோடு ஷோ

இன்றைக்கு பிரதமர் மோடி கேள்வி கேட்கிறார் என்பது அல்ல. சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேள்வி கேட்டுள்ளார் அப்போதும் பதில் இல்லை, இப்போதும் பதில் இல்லை. இது குறித்து இன்றைக்கு வரை திமுக பேசவில்லை. திமுக செய்கின்ற ஒவ்வொரு தமிழக விரோத செயல் குறித்து எந்த பதிலும் அளிக்க மாட்டார்கள். உண்மைக்கு புறம்பாக தகவல்களை திமுக கூறி வருவதற்கு இது ஒரு உதாரணம்.

சமீபத்தில் திமுக அமைச்சராக இருந்த ஒருவரே, அந்த குடும்பம் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து பணத்தை எங்கே வைப்பது என தெரியாமல் அலைந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றார். இது குறித்து ஊடங்கள் கேள்வி கேட்டது. அதற்கு கூட இன்றைக்கு வரை பதில் இல்லை. ஆனால் அந்த அமைச்சரை வேறு துறைக்கு மாற்றி விட்டனர்.

நிர்மலா சீதாராமன்

காவிரியில் தண்ணீர் இல்லை. ஆனால், சாராயம் தண்ணீர் போல கொட்டுகிறது. பல ஆண்கள் சாராயத்திற்கு அடிமையாகி போனதால், குடும்பங்கள் கெட்டுக்கொண்டு இருக்கிறது. முழுமையாக சாராயத்தை ஒழிக்காவிட்டாலும், சீர்திருத்தங்களுடன் விற்பனை செய்தாலும் பரவாயில்லை. குழாயயை திறந்தால் தண்ணீர் வருவது போல சாராயம் வருகிறது.

இன்றைக்கு போதை பொருட்களை டன் கணக்கில் கொட்டுகிறார்கள். இதிலும், அந்த குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. போதை பொருள் விற்பனையில் கிடைத்த ஆதாயத்தை வைத்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமா எடுத்தார்கள். இதற்கு கோபாலபுரம் குடும்பம் இன்றைக்கு வரை எந்த பதிலும் சொல்லவில்லை. போதை பொருள் தொடர்பாக முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

தஞ்சாவூர் பிரச்சாரத்தில் நிர்மலா சீதாராமன்

திராவிட முன்னேற்ற கழகம் என்பது, ட்ரக் முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. போதை பொருள் நமது இளைஞர்களை இன்னும் 10 ஆண்டுகளில் மொத்தமாக அழித்து விடும். போதை பொருள் ஆதாயம் மூலமாக தங்கள் குடும்பம் வளரும். தமிழகத்தில் இளையதலைமுறைகள் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன என இருந்து வருகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை ஓட ஓட விரட்டுவோம் என முதல்வர் ஸ்டாலின் சொன்னார். போதை விற்பனை செய்யும் திமுக-வை நாம் ஓட ஓட விரட்டோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.