ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியல்: கம்பேக் கொடுக்கும் டெல்லி! பாதாளத்துகு போன ஆர்சிபி அணி

17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எல்லாம் சாம்பியன்ஸ் ஆக போட்டி போடும்போது பஞ்சாப், டெல்லி, ஆர்சிபி அணிகளிடையே 10,9,8 ஆகிய இடங்களை பிடிப்பது யார் என்பதில் தான் போட்டியே இருக்கும். இந்த ஆண்டாவது இந்த டிரெண்ட் மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு ஆடிக் கொண்டிருக்கிறது டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள். அந்த இரு அணிகளும் லேட்டஸ்ட் அப்டேட்படி ஐபிஎல் 2024 தொடரின் புள்ளிப் பட்டியலில் 9, 10வது இடத்தில் இருக்கின்றன. அதாவது டெல்லி அணி, லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியை தோற்கடித்தவுடன் 10வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறிவிட்டது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 10வது இடத்துக்கும் தள்ளிவிட்டது. டெல்லி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியுடன் 10வது இடத்திலும் இருக்கின்றன. ஐபிஎல் தொடரின் தொடகத்தில் அடுத்தடுத்து தோல்விகளை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த சில போட்டிகளாக அந்த அணி மீண்டும் பார்முக்கு திரும்பி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. அத்துடன் புள்ளிப் பட்டியலிலும் 7வது இடத்துக்கு முன்னேறிவிட்டது. 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 3 தோல்விகளை பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

அதேபோல், ஐபிஎல் 2024ல் ராஜஸ்தான் ராயல்ஸின் ஆதிக்கம் தொடர்கிறது. அந்த அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ளது, அதில் சஞ்சு சாம்சன் அணி 1 போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து டேபிள் டாப்பராக நீடிக்கிறது. அடுத்து விளையாடும் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் தொடரை தொடர்ந்து வெற்றி பெறவே அந்த அணி விரும்புகிறது. இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணி உள்ளது. அதேபோல், KKR 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று டாப்-3-ல் சென்னை உள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும் லக்னோ அணி 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. அதேபோல் சன்ரைசர்ஸ் அணி 5ல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 5வது இடத்திலும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆறு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று 6வது இடத்திலும் உள்ளன. முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் 10 அணிகளுக்கும் முக்கியம். ஒவ்வொரு வெற்றி தோல்வியும் புள்ளிப் பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆர்சிபி அணியைப் பொறுத்தவரையில் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.