
வகுப்பறையில் பூட்டி வைத்து 8ஆம் வகுப்பு மாணவியை 4 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மட்டுங்கா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், சில நாட்களுக்கு முன்பு 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் நடன பயிற்சிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அதே வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுமி ஒரு வகுப்பறையில் தனியே இருந்துள்ளார். மாணவி தனியே இருப்பதை கண்ட ஒரு 4 மாணவர்கள் அந்த வகுப்பிற்குள் சென்றனர்.
2 மாணவர்களை வெளியே காவலுக்கு வைத்துவிட்டு மற்ற இரண்டு பேர் வகுப்பறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மாணவி கதறி அழுதுள்ளார். இதனை வெளியே சொல்ல கூடாது என்றும் மாணவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. எனவே மாணவி பள்ளியில் இருந்து பாதியிலேயே வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாணவி அழுது கொண்டிருப்பதை கண்ட பெற்றோர் இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது அழுதுகொண்டே மாணவி தனக்கு நடந்ததை தெரிவித்தார். இதைக்கேட்டதும் அதிர்ந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்கள் மீது போக்ஸோ வழக்கில் அதிகாரிகள் வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
newstm.in