காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 46.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமானவர் திருமகன் ஈவேரா. இவர், மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் ஈரோட்டில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவேரா என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.