ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி பளு தூக்கும் வீராங்கனைகளில் ஒருவர் சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.
குஜராத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியின்போது அவரது சிறுநீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது. தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து தடுப்புக் குழுவின் முன்பு சஞ்சிதா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் அவர் போட்டிகளில்பங்கேற்க முடியாதபடி நீக்கம் செய்யப்படலாம்.
அத்துடன், அவர் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தையும் இழக்க நேரிடும். மூத்த வீராங்கனை ஊக்கமருந்து வலையில் சிக்கியிருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
newstm.in