சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒர் பார்வை..!!

கேள்வி நேரத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது பற்றி பட்டியல் என்னிடம் உள்ளது எனவும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது ஆதாரத்துடன் பேச வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் உற்பத்தி பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுக்க சோலார் மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் எழுப்பிய கேள்விக்கு, செங்கம் – வேலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதற்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியக பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளன. முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகு அது திறக்கப்படும் என்றும் கூறிய அமைச்சர் எ.வ.வேலு, “செங்கம் – வேலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலை உடன் இணைக்க புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை. புறவழிச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க அதிமுகவினர் கருப்பு சட்டையுடன் வந்தனர். ஆளும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஆளுநருக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்துள்ளனர். அதுபோலவே ஓபிஎஸ் இருக்கை விவகாரம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி குறித்து முடிவு எடுக்காதது உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.