தமிழகத்தில் பொங்கல் விழாவாக கொண்டாடப்படும் நிலையில், வடமாநிலங்களில் மகரசங்கராந்தி என கொண்டாப்படுகிறது. இந் நன்நாளில் விவசாயத்துக்கு உதவிய சூரிய கடவுளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு, விழா எடுத்து தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதனையே நாம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். உலகின் ஆதாரமாக விளங்குவது உணவு. அந்த உணவை தரும் உழவுக்கும், பாடுபடும் விவசாயிக்கும், உழவு தொழிலுக்கு உறுதியாக இருக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிக்கும் நாளே பொங்கல் திருநாள்.

ஜனவரி 15 :
நல்ல நேரம் – காலை 07.30 மணி முதல் 08.30 வரை
மாலை 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் – காலை 10.30 முதல் 11.30 வரை
எமகண்டம் – பகல் 12 முதல் 01.30 வரை
ராகு காலம் – மாலை 04.30 முதல் 6 வரை
பொங்கல் வைக்க நல்ல நேரம்:
பொங்கல் வைக்க சரியான நேரம் – காலை 07.45 முதல் 08.45 வரை
வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :
ஜனவரி 16 : காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை
சூரிய உதயத்திற்கு முன் வைக்கும் பொங்கலுக்கு சூரிய பொங்கல் என்று பெயர். பிரம்ம முகூர்த்த நேரத்தில் வைக்கப்படும் பொங்கலுக்கு நல்ல நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் 5.30 மணிக்குள் பொங்கல் வைத்து முடித்து விடுவது சிறப்பானது என்பார்கள். ஆனால் இன்று சூரிய பொங்கல் வைக்கும் முறை வெகுவாக குறைந்து விட்டது. குடும்பமாக கூடி பொங்கல் வைத்து மகிழ்வதும் குறைந்து விட்டது.