பள்ளி முதல்வர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் லிங்கசுகுர் நகரில் உள்ள சார் எம்.விஸ்வேஸ்வரய்யா பள்ளி விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி இறப்பில் மர்மம் இருப்பதால் அவரின் உறவினர்கள் மற்றும் சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பள்ளி முதல்வர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. கல்லூரி முதல்வரும், விடுதி வார்டானுமான ரமேஷ் தலைமறைவானதை அடுத்த போலீஸார் சந்தேகத்தை உறுதி செய்தனர்.
பின்னர் மொபைல் போன் எண்ணை வைத்து பள்ளி முதல்வரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
மாணவி வேறு பள்ளிக்கு மாறுவது தெரியவந்த பள்ளி முதல்வர், தாம் மாட்டிக் கொள்வோம் என்று தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகியுள்ளது. அவரை கைது செய்த போலீஸார், வேறு மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in