பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது.
இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி முன்பெல்லாம் படத்தின் பல நிமிட காட்சிகளை பத்திரிகையாளர்களுக்காக வெளியிடுவார். இந்த முறை பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் முதல் 4 நிமிட காட்சிகளை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
இந்த படம் மூளைமாற்று அறுவை சிகிச்சை பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது ட்ரைய்லரை பார்த்த ஊகிக்க முடிகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
newstm.in