வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல்

தென்காசி: தென்காசி மாவட்டம் பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில்  கரடி தாக்கியதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு  அந்த கரடியை கொல்ல வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஸ்னாய் வெற்றி

அரியானா: அரியானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஸ்னாய் வெற்றி பெற்றார். ஆதம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷை 15,714 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9-ம் நூற்றாண்டு அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென்டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்திலும் கால்களிலும் … Read more

வைகை அணையின் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: தேனி வைகை அணையின் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியுள்ளது. இதனால் நீர் திறப்புவினாடிக்கு 2,320 என்ற விகிதத்தில் உள்ளது. எனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆறு, கால்வாய்களில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என வைகை அணை உதவி செயற்பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மே 31 வரை ஒதுக்கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: அடுத்தாண்டு மே 31 வரை ஒதுக்கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. 2023 அக்டோபர் 31 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை உள்ள நிலையில் ஒதுக்கீடு அடிப்படையில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஒன்றிய அரசு அனுமதி மூலம் நேரடியாகவோ, ஏற்றுமதியாளர்கள் மூலமாகவோ சர்க்கரையை ஏற்றுமதி செய்யலாம்.

குமரி விசைப்படகு மீது நடுக்கடலில் வெடிகுண்டு வீச்சு; 51 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: குமரி விசைப்படகு மீது நடுக்கடலில் வெடிகுண்டு வீசப்பட்டது. கன்னியாகுமரி  அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும்  மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன. தொடர் மழை காரணமாக ஒருசில விசைப்படகுகளே தற்போது மீன்பிடிக்க  சென்று வருகிறது. இந்த நிலையில்  நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் சின்னமுட்டத்தை சேர்ந்த சில்வெஸ்டர்  என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மாலை 5 மணியளவில் சின்னமுட்டத்தில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் … Read more

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி

அடிலெய்டு: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிக்கு பாகிஸ்தானி முன்னேறியது. சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

காற்றை தடை செய்ய முடியாதது போல, அதிமுக ஆட்சிக்கு வருவதையும் தடுக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாமக்கல்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51 ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் … Read more

அமராவதி அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதால் வெள்ள எச்சரிக்கை விடுப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 90 அடியுள்ள அமராவதி அணையில் தற்போது நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளதால் முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு தற்போது வினாடிக்கு 1,390 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 175 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

6 மாநிலங்களில் நடந்த 7 தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை: தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

புதுடெல்லி: தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடக்கிறது. மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 3ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜவிடமும், 2 தொகுதிகள் காங்கிரசிடமும், சிவசேனா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியிடம் தலா … Read more