ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

ஹவுரா:  மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுராவில் நேற்று முன்தினம் ராமநவமியையொட்டி நடந்த ஊர்வலத்தின்போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையில், போலீசாரின் வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது, கடைகள் சூறையாடப்பட்டது. இதனை தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் வகையில் காசிபாரா  பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது திடீரென மர்மநபர்கள் செங்கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மீண்டும் … Read more

கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் நோயாளிகளுக்கு முககவசம் கட்டாயம்

செங்கல்பட்டு: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முககவசம் அணிவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் … Read more

தமிழில் வெளியாகும் ஹாலிவுட் திகில் படம்

சென்னை: தி போப் எக்ஸார்ஸிஸ்ட் ஹாலிவுட் திகில் படம் தமிழிலும் வரும் ஏப்ரல் 7ம் தேதி ரிலீசாகிறது. ஆவியால் பீடிக்கப்பட்ட ஒரு சிறுவனைக் காப்பாற்றும் பொறுப்பு பாதிரியார் கேப்ரியலிடம் வருகிறது. திகிலூட்டும் அந்த வழக்கு, …

ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அகமதாபாத்: பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை தருமாறு 7 ஆண்டுக்கு முந்தைய ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய குஜராத் உயர் நீதிமன்றம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. பிரதமர் மோடி 1978ம் ஆண்டு அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றதாகவும், 1983ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றதாகவும் … Read more

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம்: பட்ஜெட்டில் மேயர் அறிவிப்பு

கோவை: தமிழ்நாட்டில் முதமுறையாக கோவை மாநகராட்சியில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் மேயர் தெரிவித்து உள்ளார். கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்து பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியிலே முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மின்சாரம் தயாரிப்பதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் உக்கடம் குளத்தில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் இந்த நிதி ஆண்டில் … Read more

சென்னை மதுரவாயலில் தீபாவளி பட்டாசை நாட்டு வெடி போல்டேப் ஒட்டி வெடிக்க செய்த 4 பேர் கைது..!!

சென்னை: சென்னை மதுரவாயலில் தீபாவளி பட்டாசை நாட்டு வெடி போல்டேப் ஒட்டி வெடிக்க செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கங்கை அம்மன் நகரில் தீபாவளி பட்டாசை ஒன்றாக டேப் அடித்து நாட்டு வெடி போல் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி அசோக், அவரது கூட்டாளி சுரேஷ்குமார், விஜய், இளங்கோ ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

மதுபான பிசினஸ் தொடங்கினார் ஷாருக்கான் மகன்: நெட்டிசன்கள் கடும் தாக்கு

மும்பை: மதுபான பிசினஸ் தொடங்கியுள்ளார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்து துவண்டு போயிருந்த ஷாருக்கான், இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான பதான் படத்தில் நடித்திருந்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு …

0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு

புதுடெல்லி: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஞ்சலகங்களில் சிறு சேமிப்பு திட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) திட்டத்திற்கான வட்டி 7 சதவீதத்தில் … Read more

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை கோதண்டராமர் கோயில் நிலத்தில் கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை: உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறை தகவல்

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை கோதண்டராமர் கோயில் நிலத்தில் கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டுவதை தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறை தகவல் அளித்துள்ளனர். கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு ஏப்ரல் 20க்கு ஒத்திவைத்துள்ளனர்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.