பொன்னியின் செல்வன் 2ம் பாகம்: கமல் குரலில் வெளியான அறிமுக வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் டிரைலர் எதிர்பார்த்ததை விடவும் பிரம்மாண்டமாக அமைந்தது. இரண்டாம் பாகத்தில்தான் கதை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரு பக்கம் அருண்மொழி வர்மன் இறந்ததாக வந்த செய்தியுடனும், மந்தாகினி யார் என்ற சஸ்பென்ஸுடனும் முதல் பாகம் முடிவடைந்தது. இரண்டாம் பாகத்தில் சோழ … Read more

ஒரு மாதத்தில் திருமணமா?: ஷெரின் விளக்கம்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். அதனைத்தொடர்ந்து ‛விசில்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்போது 'குக் வித் கோமாளி – சீசன் 4'ல் போட்டியாளராக இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்தார் ஷெரின். அப்போது ரசிகர் ஒருவர், திருமணம் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு, ‛ஒரு மாதத்தில் நடக்கும்' என ஷெரின் பதிலளித்தார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமீபத்தில் ஒரு ரசிகர், என் திருமணம் … Read more

மீனாட்சி திருவிளையாடல், மௌனம் பேசியதே, மொட்ட சிவா கெட்ட சிவா – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – ப்ரியமானவளே…மாலை 06:30 – மொட்ட சிவா கெட்ட … Read more

கடவுள் குறித்து அவதூறு: தி.மு.க., நிர்வாகி மீது புகார்| Defamation of God: Complaint against DMK executive

ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரித்து, முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ள உடுமலை தி.மு.க., நிர்வாகி மீது, பா.ஜ., கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தி.மு.க., வில் மாவட்ட பிரதிநிதியாக உள்ள வஞ்சிக்குமார், அவரது பேஸ்புக் பக்கத்தில், ஹிந்து மதம் குறித்தும், இதன் மத நம்பிக்கைகள் குறித்தும், ஹிந்து மத கடவுள்களை மிகவும் கொச்சைப்படுத்தி வெளியிட்டுள்ளார். அவர் மீது, வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், என உடுமலை நகர பா.ஜ., கட்சித்தலைவர் கண்ணாயிரம் தலைமையில், ஒன்றியத்தலைவர் நாகமாணிக்கம், திருப்பூர் … Read more

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் ஹிந்தி பட இயக்குனர்

நடிகர் விஜய் சேதுபதி இப்போது தனது ஐம்பதாவது படமான மகா ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை குரங்கு பொம்மை பட இயக்குநர் நிதிலன் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் (எ) நட்டியும் நடிக்கிறார். ஆக்ஷன், ரிவென்ஞ் டிராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில், இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில் இதில் பிரபல இந்தி பட இயக்குனர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் … Read more

கயானா பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை| Union Minister Jaishankar confers with Prime Minister of Guyana

ஜார்ஜ்டவுன்: கயானாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் பிரதமர் மார்க் பிலிப்சை நேரில் சந்தித்தார். இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: வர்த்தகம், பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கயானாவின் வளர்ச்சிக்கான பயணத்தில் இந்தியா ஒரு பங்குதாரராக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜார்ஜ்டவுன்: கயானாவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் பிரதமர் மார்க் பிலிப்சை நேரில் சந்தித்தார்.இது குறித்து … Read more

மீண்டும் கமல் படத்தில் ஆண்ட்ரியா

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த வகையில் நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் அவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள். முதன்முறையாக இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கமல் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் … Read more

ஒரு வழியாக திரைக்கு வந்தது தமிழரசன்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் தமிழரசன். இந்த படத்தை இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன், சோனு சூட், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இசை அமைத்துள்ளார் .இந்த படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரித்துள்ளது. கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் பல ரிலீஸ் தேதிகள் அறிவித்தும் வெளியாகமல் இருந்தது. சமீபத்தில் ஏப்ரல் … Read more