இந்தியாவில் 67 ஆயிரமாக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.80 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,597 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,23,39,611 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,80,456 பேர் நலமடைந்ததால், … Read more

வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினி?

சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்திற்கு பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ள ரஜினி இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் தற்போது ரஜினி நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, தாணு தயாரிப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. தற்போது சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வரும் … Read more

குடியேற்ற முகாமில் 56 இந்திய மீனவர்கள்| Dinamalar

கொழும்பு : இலங்கையில், நீதிமன்றம் விடுவித்த இந்திய மீனவர்கள், 56 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததை அடுத்து, கொழும்பு குடியேற்ற முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிச.,ல் இந்திய மீனவர்கள், 56 பேர் இலங்கை மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்; அவர்களின், 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து கடந்த ஜன., … Read more

சர்தார் படப்பிடிப்பில் ராஷி கண்ணா

பொன்னியின் செல்வன், விருமன் படங்களைத் தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் படம் சர்தார். மித்ரன் இயக்கும் இந்த படத்தில் இளமையான போலீஸ் அதிகாரி மற்றும் முதிர்ச்சியான வேடம் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே சிம்ரன், அஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக ராஷி கண்ணா சென்னையில் நடந்து வரும் சர்தார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த தகவலை சோசியல் மீடியாவில் இவர் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம்| Dinamalar

வாஷிங்டன் : உலகின் 13 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் குறித்து அமெரிக்க தகவல் ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த, ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற தகவல் ஆய்வு நிறுவனம், சர்வதேச தலைவர்கள் குறித்து கருத்துக் கணிப்பு நடத்துகிறது. கருத்துக் கணிப்புஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், … Read more

வங்கிகள் தனியார் மயமா? மத்திய அமைச்சர் பதில்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என, மத்திய அமைச்சர் பகவத் கராத் தெரிவித்தார். பார்லிமென்டில் நேற்று இவர் கூறியதாவது: முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சில விஷயங்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் … Read more

கவர்ச்சி ரூட்டில் இறங்கிய மீராஜாஸ்மின்

தமிழில் தான் அறிமுகமான ரன் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஓடிப்பிடித்து கபடி ஆடியவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதைத்தொடர்ந்து சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் ஒருகட்டத்தில் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு கொஞ்ச காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தில் டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் சோசியல் … Read more

கனடாவில் வலுக்கும் போராட்டம்; தலைநகரில் அவசர நிலை பிரகடனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரோன்டோ : கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் வலுவடைந்துள்ளதால், கனடா தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா வைரசால், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை 35ஆயிரத்தை நெருங்குகிறது.இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாரி டிரைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு, ‘டோஸ்’களை … Read more