என்4 : சின்னத்திரை நடிகைகளின் பெரிய திரை

தர்மராஜ் பிலிம்ஸ் மற்றும் பியாட் தி லிமிட் கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் படம் என்4. லோகேஷ் குமார் இயக்குகிறார். திவ்யங்க் ஒளிப்பதிவு செய்கிறார், பாலசுப்பிரமணியன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சுந்தரி தொடரில் நடிக்கும் கேப்ரில்லாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வினுஷா தேவியும் கதை நாயகிகளாக நடிக்கிறார்கள். இருவருமே டிக்டாக் புகழ் மூலம் சின்னத்திரைக்கு வந்து அதன் வழியாக இப்போது பெரிய திரைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை, அபிஷேக் சங்கர், அனுபமா குமார், வடிவுக்கரசி, … Read more

கனடா தலைநகரில் அவசர நிலை பிரகடனம்| Dinamalar

டொரோன்டோ : கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் வலுவடைந்துள்ளதால், கனடா தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா வைரசால், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்குகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.லாரி டிரைவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு, ‘டோஸ்’களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. … Read more

கடற்கரையில் தேவதை போல் போஸ் கொடுத்த லாஸ்லியா!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார் லாஸ்லியா மரியநேசன். ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக இருந்த லாஸ்லியா தற்போது மிகவும் மாடலாகி விட்டார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் தவமாய் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில், கடற்கரை மணலில் வெள்ளை உடையில் கையில் பெரிய ரோஜாவுடன் காத்திருக்கும் அழகிய தேவதையாக நிற்கும் லாஸ்லியாவின் புதிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்தார். அதன் பின் தமிழ்நாட்டில் பிக்பாஸ் … Read more

ஷங்கர், ராம்சரண் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்சி 15', அதாவது ராம்சரணின் 15வது படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் நாளை பிப்ரவரி 8 முதல் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் ஆரம்பமாக உள்ளது. அங்கும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் படத்தின் முக்கியமான சில காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். ஷங்கர் முதன் முதலாக இயக்கும் நேரடி தெலுங்குப் படம் இது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட … Read more

தமிழ் சீரியலில் கனிகா

பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகா, அதன் பிறகு தமிழ், மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை பக்கம் வந்தார். தொகுப்பாளினியாக இருந்தவர் திருவிளையாடல் என்ற தொடரில் நடித்தார். அதன்பிறகு மலையாளத்தின் பக்கம் சென்றார். அங்கு படங்களிலும், தொடர்களிலும் நடித்தார். தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் என்கிற தொடரில் நடிக்கிறார். ஒரு காலத்தில் பெண்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்ட கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இந்த தொடரை இயக்குகிறார். குடும்பத்துக்காக … Read more

மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் மனு| Dinamalar

புதுடில்லி: தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 80 சதவீத மக்களுக்கு முதல் 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விட்டது. கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தலாமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்னும் இரண்டாவது … Read more

'வலிமை' வந்துதான் காப்பாற்ற வேண்டுமா ?

கொரோனா ஒமிக்ரான் அலை கடந்த வருட டிசம்பர் மாதக் கடைசியில் பரவ ஆரம்பித்தது. அதனால், ஜனவரி முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினார்கள். அதனால், பல முக்கிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட படங்களை இந்த மாதக் கடைசியிலிருந்து அடுத்தடுத்து வெளியிட உள்ளார்கள். தமிழில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட படங்களில் எந்த ஒரு படமும் வசூல் ரீதியாக லாபத்தைத் தரவில்லை. சிறிய படங்களே வெளிவந்ததால் பல … Read more

நொய்டா இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க ஏற்பாடு| Dinamalar

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரம் கட்டடம் உச்ச நீதிமன்றம் உத்தரப்படி இரு வாரங்களுக்குள் இடித்து தள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உ.பி.,யில் நொய்டா நகரில் ‘சூப்பர்டெக்’ என்ற நிறுவனம் 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது காட்டிய வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குடியிருப்போர் … Read more

ஒன்றாக லன்ச் சாப்பிட்ட சமந்தா, வரலட்சுமி

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில நடிகைகள் மட்டுமே நடித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. சென்னையைச் சேர்ந்த மற்றொரு நடிகையான வரலட்சுமி சரத்குமார், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லி கதாபாத்திரம் என பல விதங்களில் நடித்து வருகிறார். சமந்தா தற்போது நடித்து வரும் 'யசோதா' என்ற தெலுங்குப் படத்தில் வரலட்சமியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் … Read more