சம்பளம் கொடுத்துட்டீங்களே, கார் எதுக்கு ? – விஜய்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான படங்களைக் கொடுத்த இயக்குனர்களுக்கு அவர்கள் இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் பரிசளிப்பதும், அந்த ஹீரோக்களை வைத்து படங்களைத் தயாரித்தவர்கள் ஹீரோக்களுக்கு பரிசளிப்பதும் பல வருடங்களாக இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படத்தின் பெரும் வெற்றிக்காக அந்தப் படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களைப் பரிசளித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர். 'லியோ' படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் லலித்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கார் பரிசளிப்பது குறித்து விஜய் … Read more

மும்பை செல்லும் ரஜினி 170வது படக்குழு

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக … Read more

அக்., 24ல் ‛துருவ நட்சத்திரம்' புதிய டிரைலர்

கவுதம் னேன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் ‛துருவ நட்சத்திரம்'. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் ஒருவழியாக ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. ஏற்கனவே படத்தின் டீசரை சமீபத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் இந்த படத்தின் புதிய டிரைலர் வரும் அக்., 24ல் ரிலீஸாவதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார். அதோடு படம் நவ., 24ல் ரிலீஸாகிறது.

கன்னட நாவலை தழுவி மூன்றாவது படத்தை இயக்கும் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்

பாலிவுட்டில் கடந்த வருடம் வெளியான காஷ்மீர் பைல்ஸ் என்கிற படத்தின் மூலம் பரபரப்பான இயக்குனராக மாறியவர் விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி. தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது. அரசியல் அரங்கிலும் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் … Read more

ரத்த வெறி பிடித்த ஹமாஸ் படையினர் அமைப்பின் தலைவர் மகன் பகிரங்க பேட்டி| The son of the leader of the bloodthirsty Hamas militant organization gave a public interview

வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பை நிறுவிய தலைவர்களில் ஒருவரது மகன், அவர்களின் பயங்கரவாத நடவடிக்கை பிடிக்காமல் குடும்பத்தை பிரிந்து அமெரிக்கா சென்று, கிறிஸ்துவராக மதம் மாறிய நிகழ்வுகளை முதல்முறையாக வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். படுகொலை மேற்காசியாவில் உள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் மொசாப் ஹசன் யூசப். ஹமாஸ் பயங்கரவாத குழுவை நிறுவிய முக்கிய தலைவர்களில் ஒருவரது மகனான இவர், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள செய்தி சேனலுக்கு, இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கு … Read more

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் கவுரவம்

உலக புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமியின் துணை அமைப்பான அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு முன்னணி தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆரை தனது அமைப்பில் உறுப்பினராக சேர்த்துள்ளது. இந்த அமைப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் ஜூனியர் என்டிஆரும் இடம் பெறுகிறார். இதுகுறித்து அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திரைத் துறையில் அர்ப்பணிப்பும், சேவையும் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை … Read more

காசா பகுதிக்கு நிவாரண பொருள்: இரண்டு பிணைக்கைதிகள் விடுவிப்பு| Relief to the Gaza Strip included the release of two hostages

ரபா: போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்காக, பல்வேறு நாடுகள் வழங்கிய 30 லட்சம் கிலோ எடையுள்ள நிவாரணப் பொருட்கள், 200 லாரிகளில், எகிப்து எல்லை வழியாக, ஐ.நா.,வின் மேற்பார்வையில் நேற்று அனுப்பப்பட்டன. இதற்கிடையே, தங்கள் வசம் இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பிணைக்கைதிகளை, ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர் இரண்டு வாரங்களை கடந்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 7ம் தேதி … Read more

இலங்கை இயக்குனர் இயக்கி, மணிரத்னம் வெளியிடும் படத்திற்கு விருது

இலங்கை சினிமாவின் முன்னணி இயக்குனர் பிரசன்ன விதானகே. இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் போரினால் மனித குலத்திற்கு ஏற்படும் அழிவுகளை பற்றியதாக இருக்கும். தமிழருக்கும், சிங்களருக்கும் இடையே நடந்த பிரச்னைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய 'டெத் ஆன் எ புல் மூன் டே', வித் யு வித்தவுட் யு' ஆகிய படங்கள் உலக புகழ்பெற்றவை. இந்நிலையில், தற்போது அவர் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம் 'பேரடைஸ். இந்த படத்தில் மலையாள நடிகர்களான ரோஷன் மேத்தீவ், தர்ஷனா … Read more

பிரிட்டனில் தஞ்சம் அடைந்திருந்த நவாஸ் ெஷரீப் நாடு திரும்பினார்| Nawaz Sharif, who had taken refuge in Britain, returned to the country

இஸ்லாமாபாத்: கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிட்டனில் தஞ்ச மடைந்திருந்த, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 73, நேற்று நாடு திரும்பினார். அவருக்கு கட்சியினர் பலத்த வரவேற்பு அளித்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் பிரிவின் தலைவர் நவாஸ் ஷெரீப். கடந்த 2016ல், ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் பல நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்த மோசடி வெளியானது. இதில், நவாஸ் ஷெரீப் மற்றும் … Read more