பாகிஸ்தானில் ஜப்பானியர்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரின் கிளிப்டன் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த ஜப்பான் நாட்டவர்கள் 5 பேர், இன்று காலையில் ஏற்றுமதி மண்டலம் நோக்கி வேனில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாவலர்கள் 2 பேர் சென்றனர். புறநகர்ப் பகுதியான லண்டியில் உள்ள முர்தசா சோரங்கி அருகே சென்றபோது, பைக்கில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வழிமறித்து, வேனில் மோத முயன்றனர். இதனால் சுதாரித்த பாதுகாவலர்கள், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி உயிரிழந்தான். … Read more

காந்திநகர் தொகுதியில் மத்திய மந்திரி அமித்ஷா வேட்புமனு தாக்கல்

காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். இந்த நிலையில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உடன் இருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் … Read more

பும்ராவுக்கு எதிராக ஸ்வீப் ஷாட் அடிப்பது என்னுடைய கனவு – அசுதோஷ் சர்மா பேட்டி

சண்டிகர், 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசனின் 33-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 193 ரன்கள் … Read more

ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு

லண்டன்: ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் மாலை, சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. … Read more

நாடு முழுவதும் வாக்குப்பதிவு தீவிரம்…மதியம் 1 மணி நிலவரம் என்ன?

புதுடெல்லி, நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மக்கள் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில், திரிபுராவில் மதியம் 1 மணி நிலவரப்படி 53.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல மேற்கு வங்காளம்- 50.96 சதவீதம், உத்தரபிரதேசம்- 36.96 சதவீதம், உத்தரகாண்ட் – 37.33 சதவீதம், பீகார்- 32.41 சதவீதம், … Read more

வேகப்பந்து வீச்சில் பிஎச்டி எனும் பட்டம் இருந்தால் அதை அந்த இந்திய பவுலருக்கு கொடுக்கலாம் – இயன் பிஷப்

மும்பை, 10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. மும்பையின் இந்த 3 வெற்றிக்கும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவே காரணம் என்று சொல்லலாம். அந்த அணியின் மற்ற பவுலர்கள் எல்லாம் ரன்களை வாரி வழங்கி … Read more

திடீரென பறந்து வந்த ஆளில்லா விமானங்கள்.. வான் பாதுகாப்பை தீவிரப்படுத்திய ஈரான்

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் நாட்டில் இருந்து ஏராளமான ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் பாய்ந்த நிலையில், இந்த தாக்குதலை இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு சாதனங்கள் மூலம் முறியடித்தது. இந்த தாக்குதலானது, இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் … Read more

மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு.. வாக்காளர்கள் அலறியடித்து ஓட்டம்

இம்பால், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டாக நீடித்து வரும் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கலவரம் இன்னும் முழுமையாக ஓயாததால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் மணிப்பூரை பொறுத்தவரை உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் என 2 தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று … Read more

கேன்டிடேட் செஸ் போட்டி: 12-வது சுற்றில் குகேஷ் வெற்றி

டொராண்டோ, உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 12-வது சுற்று நேற்று நடந்தது. சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவை எதிர் கொண்டார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 57-வது நகர்த்தலுக்கு … Read more

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள்.. அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நிழல் யுத்தம் தீவிரமடைந்து நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தியது. அவற்றை அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் முறியடித்தது. இந்த தாக்குதல் காரணமாக, இரு நாடுகளிடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் … Read more