இன்று பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்

அகமதாபாத் இன்று பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தார். இன்று காலை 7 மணிக்கு மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமரை உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றார். அப்போது பிரதமர் மோடி வெள்ளை நிற பைஜமா, காவி நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். வரும் வழியில் … Read more

இன்று முதல் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ண்ப்பிக்கலாம்

சென்னை தமிழக அரசு தேர்வுத்துறை இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். நேற்று காலை 9.30 மணிக்கு இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்படி 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 … Read more

கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி ஆளுநர் பரிந்துரை

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் என் ஐ ஏ விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். அமலாக்கத்துறை டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையி்ல் நடந்த பண மோசடி தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கெஜ்ரிவால் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதாகவும், அப்போது … Read more

மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை : உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சசிகலா என்பவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த தனது 15 வயது மகனை 2016ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். குடல் அழற்சி (அப்பண்டிஸ்) நோய் காரணமாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை … Read more

நாளை மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு… எந்தெந்த தொகுதிகளில் ?

2024 மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (7-5-2024) நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள மொத்தம் 26 தொகுதியில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர, மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், பீகாரில் 5 … Read more

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்… தங்கபாலு உள்ளிட்ட 30 பேருக்கு சம்மன்..

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). தொழிலதிபரான இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றவர் இரண்டு நாட்களுக்குப் பின் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் எழுதிய இரண்டு கடிதங்கள் சிக்கியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக ஜெயக்குமார் கடிதத்தில் … Read more

நாளை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 06.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.05.2024: தமிழகத்தில் ஓரிரு … Read more

சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை சென்னை மாநகராட்சி சென்னை நகர சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. எப்போதும் கத்திரி வெயில் காலத்தில்தான் வெப்பம் வாட்டி வதைக்கும். என்னும் நிலையில் இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தமிழகத்தில் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட மக்கள் அச்சப்படும் அளவுக்கு வெயில் அடிப்பதால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கேழ்வரகு கூழ், … Read more

பாஜக ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பகல் கனவு காண்கிறது : நவீன் பட்நாயக்

புவனேஸ்வர் ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று ஒடிசாவில் பிரதமர் மொடி தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது பிரதமர் மோடி, “வரும் ஜூன் 4ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. நாங்கள் அன்று பாஜக சார்பில் முதல்வர் … Read more

நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தி : தேசிய தேர்வு முகமை

டெல்லி நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்தியை தேசிய தேர்வு முகமை வதந்தி எனக் கூறி உள்ளது. நாடெங்கும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும், ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் ‘நீட்’ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி 2024-25-ம் … Read more