போர் – மழை வெள்ளம் எதிரொலி: இஸ்ரேல், துபாய்க்கு விமான சேரவை தற்காலிகமாக ரத்து செய்தது ஏர் இந்தியா

டெல்லி: இஸ்ரேல் காசா போர், துபாய் மழை வெள்ளம் காரணமாக, இந்தியன் ஏர்லைன்ஸ், இஸ்ரேல் மற்றும் துபாய் நாடுகளுக்கு விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் காரணமாகவும்,  “விமான நிலையத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள்” காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகியவை தங்கள் சில சேவைகளை ரத்து செய்துள்ளன. மறு அட்டவணை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. இஸ்ரேல் காசா இடையிலான போர், மற்றும் … Read more

மக்களவை தேர்தல்2024: தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 18வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19ந்தேதி) அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 7 மணி நேர நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு, அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கினை … Read more

இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்! பிரதமர் மோடி, ராகுல்காந்தி வேண்டுகோள்…

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான  ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்,. முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுபோல, இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் இளந்தலைவர்  ராகுல் காந்தி  தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது … Read more

ஆறு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து திருவள்ளுர் அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு…

திருவள்ளூர்: ஆறு வழிச்சாலை திட்டத்துக்கு  தமிழ்நாடு அரசு  நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து திருவள்ளுர் அருகே குமாரராஜப்பேட்டை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்கினை செலத்தி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். … Read more

6 மாவட்டங்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை… தனி மாநிலம் கோரி தேர்தலை புறக்கணித்த நாகாலாந்து மக்கள்…

நாகாலாந்து மாநிலத்தின் மான், தியுன்சாங், லாங்லெங், கிபயர், ஷமதோர் மற்றும் நாக்லக் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தனி மாநிலம் கோரி கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்கம் (ENPO) எழுப்பிய கோரிக்கையை ஏற்று அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் இன்று நடைபெற்ற தேர்தலை முழுமையாக புறக்கணித்துள்ளனர். 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டமன்றத்தில் 20 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பகுதிக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் … Read more

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவு

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி,  தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 18வது மக்களவைக்கான  முதற்கட்ட தேர்தலானது  தமிழ்நாடு, புதுச்சேரி,  அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதி, கேரளா மற்றும் உள்பட  உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று  தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் சில மாநிலங்களில் … Read more

திருவள்ளூரை தொடர்ந்து தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் , தூத்துக்குடி பொட்டலூரணி கிராம மக்கள்…

புதுக்கோட்டை: ஆறுவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுர் மாவட்டத்தில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத  திமுக  அரசை கண்டித்து வேங்கை வயல் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில்,  உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.  மேலும் பரந்துர் கிராம மக்கள் உள்பட பல பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே தனியார் உரத் … Read more

மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு: காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 % வாக்குப்பதிவு

சென்னை: மக்களவையின் முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 11மணி நிலவரப்படி தமிழ்நாட்டில், 24,37 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதிகபட்ச வாக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  நடைபெற்றுள்ளது. ன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மக்கள் விறுவிறுப்பாக வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருவதால் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று … Read more

மத்தியஅரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் செய்யவில்லை! ஆர்.டி.ஐ தரும் அதிர்ச்சி தகவல்…

சென்னை: தமிழக எம்.பி.கள், மத்திய அரசின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 25% மட்டுமே செலவு செய்துள்ளதாக ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல்கள்  கிடைக்கப்பெற்றுள்ளது. இதில்,  மத்திய சென்னை மற்றும் வேலூர் தொகுதி எம்.பி.க்கள்  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எதுவும் செலவிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  இந்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியான ரூ.367கோடி நிதியில்,  வெறும் ரூ.93 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளனர். மீதமுள்ள ரூ.274 கோடி செலவிடப்படவில்லை. … Read more

பறவை காய்ச்சல் எதிரொலி: கேரளாவில் ஒரு வாரம்  இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பறவை காய்சல் பரவத்தொடங்கி உள்ளதால், ஆலப்புழா மாவட்டத்தில் ஒருவாரம், இறைச்சி, முட்டை விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி இறைச்சி விற்பனைக்கு தடை போடப்பட்டுள்ளது. கேரள மாநலிம், ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல்  பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது, மேலும் பரவாமல் இருக்க, அங்குள்ள பறவைகளை அழிக்க மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பறவை காய்ச்சல்  பாதித்த குட்டநாட்டில் கால்நடை பராமரிப்புத் துறையின் (ஏஎச்டி) விரைவுப் பதிலளிப்புக் குழுக்கள் … Read more