300நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுமீது மே 6ம் தேதி விசாரணை!

சென்னை: 300 நாட்களை கடந்து சிறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம்,  மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது. பண மோசடி தொடர்பான திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கு மேலாக  சிறையில் உள்ளார். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க மறுத்து வருகிறது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமின் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. … Read more

தென்சென்னை பகுதியில் 2நாட்கள் குடிநீர் வராது! சென்னை மாநகர குடிநீர் வாரியம் அறிவிப்பு…

சென்னை: நெம்மேலியில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அடையாறு  முதல் சோழிங்கநல்லூர் வரையிலான தென்சென்னை பகுதிகளில் இரண்டு நாட்கடள்  குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கொளுத்தும் வெயில் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மேவகமாக குறைந்த வருகிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீரை வீணாக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை குடிநீராக்கி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களால்தான் சென்னை மக்கள் குடிநீர் … Read more

PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை! தீவிரமாக அமல்படுத்துமா அரசு?

சென்னை: PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை  மே1ந்தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற உத்தரவுகள் வெளியானாலும், ஆட்சி மாற்றத்துக்கு தகுந்தவாறு, இதுபோன்ற போலி லேபிள்களை ஒட்டிக்கொண்டு, அலப்பறை செய்பவர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ள நிலையில், தற்போது மீண்டும், வாகனங்களில்  பெயர்களை ஒட்ட தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த தடை மே 2 முதல் அமலுக்கு வருகிறது.  … Read more

மக்கள் கூட்ட அதிகரிப்பால் திருப்பதியில் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.   தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் வாரவிடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பக்தர்கள் பல … Read more

தொடர்ந்து 4 ஆம் நாளாக கொடைக்கானல் வனப்பகுதிகளில் எரிந்து வரும் தீ

கொடைக்கானல் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து 4 ஆம் நாளாகக் காட்டுத்தீ எரிந்து வருகிறது.  கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தால் வனப்பகுதிகளில் அவ்வப்போது தீப்பற்றுவதும், அணைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.  அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராம வனப்பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாகக் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுட்தீ கடந்த 4 நாட்களாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் பகுதிகளில் பரவி கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.  இந்தத் தீயினால் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் … Read more

தனியார் வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை…

தனியார் வாகனங்களில் உள்ள வாகன பதிவெண் தகடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பலரும் தங்கள் வாகனத்தில் பத்திரிக்கை, தலைமைச் செயலகம், போலீஸ், மின்துறை, டி.என்.இ.பி., சென்னை மாநகராட்சி, ஜி.சி.சி., மற்றும் ராணுவத்தினர் தங்கள் துறையைக் குறிக்கும் சின்னங்கள் ஆகியவற்றை தங்கள் வாகன நம்பர் பிளேட்டிலும் வாகனத்தின் வேறு பகுதியிலும் ஒட்டுகின்றனர். அரசாங்க தொடர்புடைய சின்னங்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதால் … Read more

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் ராஜினாமா

டெல்லி அரவிந்த் சிங் டெல்லி மாநிலம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். தற்போது நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதியும், 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதியும் வரும் 7, 13, 20,25  ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட … Read more

மே 10 ஆம் தேதி உதகையில் மலர்க் கண்காட்சி தொடக்கம்

உதகமண்டலம் உதகமண்டலத்தில் வரும் 10 ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இங்குக் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாலும். இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி எப்போது தொடங்கும் எனச் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து வந்தனர். மே-17-ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  தற்போது, … Read more

ஊட்டியில் வாக்கு இயந்திரம் வைக்கும் இடத்தில் சிசிடிவி செயலிழப்பு : ஆட்சியர் விளக்கம்

ஊட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஊட்டியில் வாக்கு இயந்திரம் வைக்கும் இடத்தில் சிசிடிவி செயலிழப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது   இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு 180கண்காணிப்பு  படக்கருவிகள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு … Read more

கர்நாடக முதல்வர் சட்டசபைக்கு வெளியே தர்ணா

பெங்களூரு’ கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநிலச் சட்டசபைக்கு வெலியே தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. வறட்சியால், பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது. … Read more