தமிழகத்தில் வாரம் முழுவதும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு உஷார் அறிவிப்பு?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் என ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினம் (செப்டம்பர் 5) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாமல் இன்றும் … Read more

அதெப்படி விஜய் பற்றிய பேச்சை கட் பண்ணலாம்.?: வெடித்த சர்ச்சை.. சன் பிக்சர்ஸ் பரபரப்பு விளக்கம்.!

அட்லீயின் முதல் படமாக ‘ஜவான்’ உருவாகியுள்ளது. அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பான் இந்திய அளவில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளதில் தற்போது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் பேவரைட்டான இயக்குனர் என அட்லீயை சொல்லலாம். ராஜா ராணி படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த அட்லீ, … Read more

எதே.. தலைய வெட்டப் போறியா.. "தண்டவாளத்திலேயே தலையை வைக்கிறவங்க நாங்க".. மாஸ் காட்டிய உதயநிதி

சென்னை: சனாதனம் பற்றி பேசியதற்காக தனது தலையை வெட்டிக் கொண்டு வர சொன்ன உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் … Read more

மோடி எத்தனை நாட்கள் லீவு எடுத்துள்ளார்? ஆர்டிஐ கேட்ட நபர்.. சூடாக வந்து விழுந்த பதில்!

மக்களவைக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைந்தது. அதனைத் தொடர்ந்து வந்த 2019 தேர்தலிலும் வென்று பிரதமராக நரேந்திர மோடியே தொடர்கிறார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை வகித்து வருகிறார். டெல்லியில் இருந்து அலுவல்களை கவனிக்கும் மோடி, அவ்வப்போது வெளிமாநில சுற்றுப் பயணங்கள் செல்கிறார். மேலும் வருடத்தில் பலமுறை வெளிநாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் … Read more

'ஜெயிலர்' வசூல் வேட்டைக்கு மத்தியில் மூன்று நாட்களில் கோடிகளை அள்ளிய 'குஷி': எவ்வளவு தெரியுமா.?

கடந்த மாதம் வெளியான ‘ஜெயிலர்’ வசூல் வேட்டைக்கு மத்தியில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான ‘குஷி’ படம் வசூலை வாரி குவித்துள்ளது. குஷிகடந்த வாரம் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியான படம் ‘குஷி’. ரசிகர்களிடையில் இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி காட்சிகளும் செம்மையாக வந்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘குஷி’ படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.விஜய் தேவரகொண்டாதென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் … Read more

குஷ்பு நெகிழ்ச்சி.. நான் ஒரு முஸ்லீம்.. ஆனால் எனக்கு கோயில் கட்டினார்களே.. அதுதான் சனாதனம்!

சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து இந்தியா முழுவதும் சர்ச்சையாகி வரும் நிலையில், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு … Read more

சாமி தரிசனத்திற்கு ரெடியா? இதோ ஆன்லைன் புக்கிங்… கர்நாடகா கோயில்களில் தரமான ஏற்பாடு!

கர்நாடகாவில் உள்ள கோயில்களை அம்மாநில இந்து சமய அறநிலையத்துறை (Muzrai) பராமரித்து வருகிறது. தற்போது அங்குள்ள பெரிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பெண் பக்தர்களின் கூட்டம். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆளும் காங்கிரஸ் அரசின் சக்தி (Shakti) திட்டம். இதன்மூலம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். பெண்களுக்கு இலவச பயணம் நாளுக்கு நாள் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. … Read more

Leo: அதைமட்டும் செய்தால் லியோ ஆயிரம் கோடி வசூலை தொடுமாம்..நல்ல ஐடியாவா இருக்கே..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். விஜய்யின் நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே லியோ படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற விஜய் முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாகவே இப்படத்தை முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே எடுக்க சம்மதித்துள்ளார் விஜய் என கூறப்படுகின்றது. இந்நிலையில் … Read more

வ.உ.சி துறைமுக விரிவாக்கத் திட்டம்: வேற லெவலில் மாறும் தென் தமிழகம்… ரெடியாகும் பெரிய ஜாக்பாட்!

இந்திய அளவில் மூன்று பெரிய துறைமுகங்ளை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. இந்த துறைமுகங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். எனவே இங்கே உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த துறைமுகங்களை மேம்படுத்துவது மிகவும் அவசியம். வியாபாரிகள் குவிந்ததால் கலை கட்டிய நாகை மீன்பிடித் துறைமுகம் தூத்துக்குடி துறைமுகம் மேலும் தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த மத்திய … Read more

அமித் ஷா போட்ட "ஸ்கெட்ச்".. 'கலர்' கொடுத்த உதயநிதி ஸ்டாலின்.. என்னவாகும் 'இந்தியா' கூட்டணி?

டெல்லி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது ‘இந்தியா’ கூட்டணியிலும் மிகப்பெரிய பிளவை உருவாக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொடர் முயற்சியால் உருவான ‘இந்தியா’ கூட்டணி, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினால் உடைந்து விடுமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தனது பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சை ஆகும் என உதயநிதியே எதிர்பார்த்திருக்க மாட்டார். சனாதனத்தை … Read more