Expert Panel Discussion on “ Achieving Low Carbon Development Targets in the Power Sector”

Expert Panel Discussion on “ Achieving Low Carbon Development Targets in the Power Sector” The Centre for Banking Studies (CBS) of the Central Bank of Sri Lanka (CBSL) has made arrangements to conduct above captioned webinar on 17th February 2022. Considering the prevailing situation in the country, the CBS has arranged this forum as a web-based forum on Thursday, 17th February … Read more

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை வழங்கத் தயார் – அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறும். அப்போது இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவிக்கையில், இந்த அறிக்கை மார்ச் மாதம் 3ம் திகதி கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படும். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு … Read more

கொட்டகலையில் போதை வில்லைகள் விற்பனை: போலி வைத்தியர் கைது

தாம் வைத்தியர் என்று கூறிக்கொண்டு போதை வில்லைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தியராகத் தோன்றி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வந்ததாகவும் போதை வில்லைகளை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து 338 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வில்லைகளை வாங்குவதற்காக வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் திம்புல-பத்தன பொலிசார் மேலதிக விசாரணைகளை … Read more

இலங்கை அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி 20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற இந்தப் போட்டி முடிவில் இரு அணிகளும் தலா 164 ஓட்டங்கள்  பெற்றதனால் போட்டி சமநிலையில் இருந்தது. இதனால் இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 ஆவது பந்திலேயே வெற்றி பெற்றது. இப்போட்டியில் … Read more

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று (14) ஆரம்பமானது. இந்த கொடுப்பனவை 28 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 3,500 ரூபா சமுர்த்தி கொடுப்பனவை பெற்றவர்கள் இன்று முதல் 4,500 ரூபாவை பெறத் தகுதி பெற்றுள்ளனர். அதேபோல் 2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்றவர்கள் 3,200 ரூபாவையும், 1,500 ரூபாவை பெற்றவர்கள் 1,900 ரூபாவையும் பெறவுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி வங்கிகள் ஊடாக இந்தக் கொடுப்பனவை … Read more

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பலரும் கண்டித்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அமைச்சர், பொலிஸ்மா அதிபரைக் கேட்டுள்ளார். இந்தத் தாக்குதல் வெட்கப்பட வேண்டிய கடுமையான சம்பவமாகும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் விரிவாக விசாரித்து இந்தத் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது பற்றி நாட்டிற்குத் தெளிவுபடுத்த வேண்டுமென அந்த இயக்கம் கேட்டுள்ளது. ஊடக சுதந்திரத்திற்கு … Read more

சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுப்பனவு

சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இன்று (14) உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.எ.அஸீஸ்,  பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாஸர்,பி.எம்.காசிம் கலந்து கொண்டனர். இப் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மாஞ்சோலை 207யு சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த சமுர்த்தி கொடுபுப்பனவும் இன்று வழங்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். நியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று … Read more

உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலை:தொடர்ந்தும் கண்காணிப்பு

உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வகின்றது. உக்ரேனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, அங்கு வசிப்பவர்களை வெளியேறுமாறு பல நாடுகள் தற்போது வலியுறுத்தி வருகின்றன. தற்போது உக்ரேனில் சுமார் 40 இலங்கையர்கள் இருக்கின்றனர். அவர்களில் 7 பேர் மாணவர்கள். அவர்கள் தற்போது எவ்வித பிரச்சினையுமின்றி அந்நாட்டில் தங்கியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரேனில் இலங்கைக்கான தூதரககம் ஒன்று … Read more

சிறுவர்களை யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை

சிறுவர்களை யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தப்படுவதை ,தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஆதரவும் இன்றியமையாதது என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். சிலர் தமது குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வீதிகளில் யாசகம் பெறுவதை தற்போது காணக்கூடியதாக உள்ளது. இதுபோன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக பொறுப்பானவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். மேலும், இது தொடர்பான சட்ட … Read more

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் – பொலிஸ் குழுக்கள் விசாரணை

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவரின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுவினர் இன்று காலை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பல பொலிஸ் … Read more