புழுதியாறு ஏற்று நீர் பாசனத் திட்ட புனரமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் புழுதியாறு குள ஏற்று நீர் பாசனதிட்ட புனரமைப்பு தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் குறித்த திட்ட புனரமைப்புக்கான அனுமதியை வடக்கு மாகாண சபையிடம் பெறுவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன்பகுதியில் பயிர்ச் செய்கை தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டு, இப்பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வுகாணுதல் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

புத்தாண்டு காலத்தில் விசேட அஞ்சல் விநியோக சேவை

சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை ஆகிய நீண்ட வார விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் தபால் விநியோகிப்பதற்கான விசேட சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பொது விடுமுறை தினமான ஏப்ரல் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள தபால்ஃதுணை தபால் நிலையங்கள் மூலம் Cash-on-Delivery, வெளிநாட்டு கூரியர் சேவை மற்றும் பார்சல் விநியோகம் ஆகிய விசேட சேவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலாபம் ஈட்டாத நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

நாட்டைக் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கு உரிய முறைமை அமைக்கப்படாவிட்டால் நாட்டு மக்கள் நீண்ட காலம் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் மின்சார சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மின்சார சபைக்கு நட்டம் … Read more

சுப நேரத்தில் ஒரு மரம் – தேசிய மரநடுகைத் திட்டம்

புத்தாண்டை முன்னிட்டு சுபநேரத்தில் ஏற்றுமதி ஆற்றல் வளமுள்ள பல்பருவப் பயிர் நடுகை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய ஏப்ரல் 18 திகதி மலரும் தேசிய மரநடுகை சுபநேரத்தில் (காலை 6.16) உணவுப் பெறுமதியுள்ள பல்பருவப் பயிரை நடுகை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக நேற்று (08.04.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு: 14. ‘சுப நேரத்தில் ஒரு மரம்’ – தேசிய மரநடுகைத் திட்டம் 2024 ஆண்டுக்குரிய புத்தாண்டு சுபநேர சிட்டைக்கமைய … Read more

எரிவாயு, மின்சாரம், டொலர் குறைந்துள்ளது – மரக்கறிகளின் விலையிலும் குறைவு – பந்துல குணவர்தன

ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எரிவாயு, மின்சாரம், டொலர் என்பன கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாகவும், மரக்கறிகளின் விலையும் ஓரளவுக்கு குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்காலத்தில் தம்புள்ளை, மீகொட, வெலிசறை, வெயங்கொடை ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதுடன், 1 கிலோ … Read more

2500 ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீர்மானம்

‘அனைவருக்கும் ஆங்கிலம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் கற்பித்தல்களை மேற்கொள்கின்ற 2500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற 765 பாடசாலைகளை 1,000 பாடசாலைகளாக அதிகரிப்பதற்கும், ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆங்கில மொழி மூலமான பாடங்களை கற்பிக்கின்ற அனுமதியளிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கையை 6,500 வரைக்கும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நேற்றைய தினம் (08) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 10. ‘அனைவருக்கும் ஆங்கிலம்’ … Read more

பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த விசேட குழு

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் முறைப்பாடுகளுக்கிணங்க ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டு, வெளி ஆக்கிரமிப்பாளர்களால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது குறித்து ஆராய்ந்ததுடன் பழங்குடியின மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர். அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் … Read more

மார்ச் மாத ஐசிசியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ்

மார்ச் மாதத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கமிந்து மெண்டிஸை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது. இந்த மாதத்தின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை வீரர் இவர் ஆவார். அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் தொடரின் செயல்திறனைக் கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆயசம யுனயசை மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆயவவ ர்நசெல ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இடம்பெற்று முடிந்த பங்களாதேஷ் டெஸ்ட் … Read more

புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் முகமாக” சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை – 2024″ , கரைச்சி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சமுர்த்தி சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக கரைச்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி பிரிவினரால் குறித்த சமுர்த்தி அபிமானி புத்தாண்டு விற்பனைச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது உணவு பண்டங்கள், பாதணிகள், … Read more

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாக்க ஜனாதிபதியினால் குழு நியமிப்பு

மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நியமிக்கப்படும் இந்தக் குழுவில் கண்டி பாரம்பரிய நடனக் கலைஞர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மலைநாட்டு கலை மையமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் (07) காலை … Read more