என்னை மன்னித்து விடுங்கள்..! பிரதம நீதியரசரிடம் கோரியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பிரதம நீதியரசருக்கு நேரடியாக அனுப்பிய கடிதம் தொடர்பிலேயே ஜெகத் அல்விஸ் தமது மன்னிப்பைக் கோரியுள்ளார். இந்த கடிதம் தொடர்பில், ஜெகத் அல்விஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பிரதம நீதியரசர், சட்டமா அதிபருக்கு அறிவித்தமையை அடுத்தே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. தனது அதிகாரத்தை மீறி, மேஜர் ஜெனரல் அல்விஸ், பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதியமைக்காக சட்டமா … Read more

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது. தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King … Read more

இலங்கையில் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுவது உறுதி! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாக தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற்றுக் கொள்வது மக்கள் மத்தியில் … Read more

பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கினார்

 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய வெலிக்கடை பகுதியில்,மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சட்டவிரோத உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த வாரம், இலங்கை மத்திய வங்கி, இலங்கையர் ஒருவர் வைத்திருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பு குறித்த ஏற்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. … Read more

ஜனாதிபதி கோட்டபாயவின் திடீர் முடிவு – தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார். 15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட நிலையில், அதனை இன்னுமொருவருக்கு கையளிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை புதிய அமைச்சரவை குறித்து பிரதமருடன் ஆராய்ந்தவேளை ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 21வது திருத்தமாக 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னர் ஜனாதிபதியொருவர் எந்த அமைச்சரவை பதவியையும் வகிக்க முடியாது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் … Read more

பசிலின் விருப்பத்திற்கமைய ரணில் எடுக்கும் முக்கிய தீர்மானங்கள்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் விருப்பத்திற்கமையவே புதிய  அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடைவிதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பொருளாதார நெருக்கடியும்,அரசியல் நெருக்கடியும் தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் … Read more

தயார் நிலையில் இராணுவம்: கோட்டாபய வெளியிட்ட விசேட அறிவித்தல் – செய்திகளின் தொகுப்பு

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் (அத்தியாயம் 40) வெளியிடப்பட்டுள்ளது. பொது அமைதியைப் பேணுவதற்கு ஆயுதப்படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் ஜனாதிபதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,  … Read more

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை! இலங்கை வைத்தியரின் தகவல்

தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அடைந்துள்ளதன் காரணமாக அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் மேற்கு  ஆப்பிரிக்க நாடுகளில் இந்தக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில்  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள  நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவகத்தில்,  பல நாடுகளில் பரவி வரும் இந்த குரங்கம்மை நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வசதிகள் உள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் பரிசோதனைக்கு தேவையான ரசாயனங்கள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

பொலிஸ் மா அதிபர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம்: தெற்கு ஊடகம் தகவல்

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அமைச்சு வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோரின் பதவிகளில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது. அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இவர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தங்களது சொத்துக்களை … Read more

அவுஸ்திரேலியாவுக்கு தப்பியோடிய மகிந்தவின் மகனை காப்பாற்ற தீவிர முயற்சி – அம்பலமாகும் உண்மைகள்

முன்னாள் பிரதமரின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி சென்று மெல்பேர்ண் நகரில் வசித்து வரும் நிலையில் அவரை காப்பாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யோஷித ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்று மெல்பேர்ணில் உள்ள இந்திக பிரபாத் கருணாஜீவ மற்றும் அவரது மனைவி ஷாதியா கருணாஜீவ ஆகியோரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக அண்மையில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி வெளியாகிய பின்னர், யோஷித மற்றும் அவரது குடும்பத்தினரை ராஜபக்சவினருக்கு நெருக்கமான … Read more