யாழ். பல்கலையில் மறுஅறிவிப்பு வரை நிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள்! மாணவர்களை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மாணவர் நலன்கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதுடன், விடுதிகளில் தங்கி நிற்கும் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் … Read more

ஜா எல பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

ஜா எல பகுதியில்  தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக ஜா எல பகுதில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இதேவேளை, நாடளாவிய ரீதில் தற்போது பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் அரசுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   Source link

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டம் – இன்றும் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கள்

இலங்கை முழுவதும் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையிலும் சில பிரதேசங்களில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர். ஜனாதிபதி பதவி விலகும் வரை தங்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர். Source … Read more

இலங்கையின் அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் – சட்டத்தால் குழப்பம்

இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர். சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அதே பதவியில் நீடிக்க, ஏனைய அமைச்சர்கள் மட்டும் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர். எனினும் பிரதமர் பதவி விலகினால் தான் முழு அமைச்சரவையும் விலகியதாக அமையும் என இலங்கை அரசியல் சாசனம் வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மட்டும் தமது பதவியை விலகிக் கொள்வது அரசியமைப்பின் 49இன் பிரகாரம் இது சாத்தியம் இல்லையென … Read more

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அவசரக் கால நிலைமை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, போன்றவற்றால் இலங்கையில் மக்கள் பாரிய இன்னல்களைச் சந்தித்து வருகின்றமையை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என அரசாங்கத்தைக் கண்டித்து இன்று இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள். பொறியியல் பீடம், தொழினுட்பபீடம், விவசாய பீட மாணவர்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள். எதிர்ப்பு … Read more

திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ?

கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கட்டடநிர்மாணத் துறையினர் அனுமதிப்பதில்லை. எனினும் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய எல்லா கட்டடங்களை விடவும் உயரமான ஒரு கட்டடமாக கலாச்சார மையம் … Read more

பிரதமர் பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை! பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில்,அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில்,இந்த மறுப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அரசியல் … Read more

மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் பதவி விலக வேண்டும்! மஹேல

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் சிலர் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டனர், எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றில், இந்த பிரச்சனைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும், சரியான, தகுதி வாய்ந்தவர்களால் மாத்திரமே இதனை சரி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். நாட்டிற்கு நம்பிக்கையையும் நம்பிக்கையையும் கொடுக்க ஒரு நல்ல குழு தேவை. நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. தேவையற்ற காரணங்களை … Read more

12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது : ராமேஸ்வர கடற்தொழிலாளர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை (Photos)

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் கடற்தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்திய கடற்தொழிலாளர்கள் நேற்று நெடுந்தீவு அருகே கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுபட்டதாக  12 கடற்தொழிலாளர்களை  கைது செய்துள்ளதுடன், அவர்களது விசைப்படகு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.  இவ்வாறு … Read more

அலரி மாளிகையில் தற்சமயம் முக்கிய கலந்துரையாடல்! மாற்றங்கள் பல நேரலாம்

நாட்டில் இடம்பெறும் பாரிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வலையில் கொழும்பில் தற்போது மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று  வருவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெறுவதாக  அறிய முடிகின்றது.  இதன்போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச தவிர்ந்த ஏனைய அனைத்து ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது. தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடலின் பின்னர் முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்படலாம் எனவும் மாற்றங்கள் பல நேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   … Read more