சத்தீஸ்கர்: நக்சலைட்டுகளுக்கு எதிரான `அட்டாக்’… போலி என்கவுன்டர்கள் குற்றச்சாட்டும் பின்னணியும்!

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நக்சல்(மாவோயிஸ்ட்) ஒழிப்பில் தீவிரம்காட்டி வருகிறது மத்திய அரசு. அந்தவகையில், பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை, மாவட்ட ரிசர்வ் கார்டு இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 29 நக்சலைட்டுகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். நக்சல் தேடுதல் வேட்டையில் `நக்சல்கள் இல்லாத இந்தியா’ பா.ஜ.கவின் கடந்த பத்தாண்டுகளில் 70% சதவிகிதமாக இருந்த நக்சல்களின் தீவிரவாதம் 52%-மாக குறைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. மேலும்`, எதிர்காலத்தில் நக்சல்கள் … Read more

ஒன் பை டூ

பழ.செல்வகுமார் மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “அண்ணாமலையின் பேச்சு, அதிகார ஆணவத்தின் உச்சம். கிராமப்புற, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைத் தடுப்பதும், கோச்சிங் சென்டர் நடத்துவோரை கொழிக்கச் செய்வதுமே நீட் தேர்வின் நோக்கம். இந்தத் தேர்வால், கனவு தகர்ந்து எத்தனை மாணவர்கள் தங்கள் இன்னுயிரைப் போக்கியிருக்கிறார்கள்… எத்தனை பேர் வேண்டா வெறுப்பாக வேறு படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்… எல்லாம் தெரிந்தும், ‘உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்துசெய்ய மாட்டோம்’ என்று அதிகாரத் திமிரோடு பேச பா.ஜ.க-வினரால் … Read more

அமைச்சர் காந்தி மகன் வந்த கார்மீது பாமக தொண்டர்கள் கல்வீச்சு – அரக்கோணத்தில் நடந்தது என்ன?!

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குஉட்பட்ட சித்தேரி வாக்குச் சாவடி மையத்தை பார்வையிடுவதற்காக தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தரப்பு முகவரும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகனுமான வினோத் காந்தி தனது காரில் சென்றார். அவருடன் ஓட்டுநர் சந்திரன், உதவியாளர் சீனிவாசன் ஆகிய இரண்டு பேர் சென்றனர். இவர்கள் வாக்குச் சாவடிக்கு அருகே நின்றிருந்த பா.ம.க-வினரை பார்த்து, ‘‘உங்களை யார் உள்ளே விட்டது. போலீஸை கூப்பிடுங்க..’’ என்று அதட்டல் தொணியில் பேசியதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு பா.ம.க-வினரும், ‘‘உங்கள் காரை உள்ளே அனுமதித்தது … Read more

தஞ்சாவூர்: `பேச்சுவார்த்தை தோல்வி' – ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!

தஞ்சாவூர் அருகே உள்ள இனாத்துக்கான்ப்பட்டி கிராமத்தில் மொத்தம் 150 வீடுகள் உள்ளன. சுமார் 650 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளம் விரிவாக்கம் செய்வதற்காக இனத்துக்கான்பட்டி கிராமத்தினரின் நிலத்தை 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கையக்கப்படுத்தியது. இதனால் தற்போது தீவுக்குள் இருப்பது போல் தவித்து வருகின்றனர். இனாத்துக்கான்ப்பட்டிகிராம மக்கள் கிராமமக்கள் பயன்படுத்தி வந்த பாதை மறைக்கப்பட்டதால் சுற்றி செல்கின்ற வகையில் மாற்றுப்பாதை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும், இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பள்ளிக்கூடம், குடிநீர், சாலை, … Read more

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது துப்பாக்கிச்சூடு… மணிப்பூரில் பதற்றம்!

மணிப்பூரில் இரு இனக் குழுக்களிடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரத்தில், 200 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ராணுவம், துணை ராணுவத்தை இறக்கிப்பார்த்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடிக்கடி ஆங்காங்கே கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாடு, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் மொய்ராங் தொகுதியின், தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, மக்கள் இன்று … Read more

Election 2024 : “வாக்காளர்களுக்கு விதைப்பந்து”- பசுமை ஆர்வலர்களான தேர்தல் அலுவலர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் அருகே உள்ள கண்டியங்காடு வாக்குச்சாவடி பசுமை வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்களித்த பின்னர் தேர்தல் பணியாளர்களால் வாக்காளர்களுக்கு விதைப்பந்து வழங்கப்படுகிறது. அப்போது மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்துகின்ற செயலை செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தினர். விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினர் காக்க… காக்க… கல்லீரல் காக்க! பிரச்னைகள், அறிகுறிகள், தீர்வுகள் தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், வாக்கிற்கு பணம் வாங்க கூடாது என்பது உள்ளிட்ட பல … Read more

வேலூர்: ‘‘பூசணிக்காயா, பலாக்காயா..?’’ – சின்னம் விஷயத்தில் கடுப்பான மன்சூர் அலிகான்!

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் நடிகரும், சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் வாக்குப்பதிவு மையங்களை இன்று காலை முதல் பார்வையிட்டு வருகிறார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவரது பலாப்பழச் சின்னம்மீது வெளிச்சம் படாததால் மன்சூர் அலிகான் கடுப்பாகி அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடமும் கோபம் காட்டினார். ‘‘இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதல் இயந்திரத்தில் பிரதான வாக்காளர்களின் சின்னம் ‘பளீச்’ என்று தெரிகிறது. மன்சூர் அலிகான் ஒன்று, இரண்டு என்று மக்கள் அவர்களின் சின்னங்களை பார்த்து குத்திவிட்டுச் … Read more

Elections: வாக்குச்சாவடியில் வரிசை, கூட்டம் நிலவரம் எப்படி..? வீட்டில் இருந்தபடியே அறியலாம்…

நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டிய நேரமிது. காலை முதல் மக்கள் வாக்குசாவடிகளில் நின்று ஓட்டு போடத் தொடங்கியுள்ளனர். தமிழத்தின் 39 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.   அடுத்த ஐந்து ஆண்டுகள் நம்மை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வாக்களிக்கச் செல்லும் மக்கள் பெரும்பாலும் கூட்டத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். காலையிலேயே சென்று ஓட்டு போட்டுவிடலாமா அல்லது கூட்டம் குறைந்த பின் மாலை சென்று ஓட்டு போடலாமா என … Read more

Dhoni: “தோனியைவிட தினேஷ் கார்த்திக்கிடம் இதைச் செய்வது எளிது"- தோனி குறித்து ரோஹித் சர்மா

டி 20 உலக்கோப்பைத் தொடரில் தோனியை விளையாட அழைப்பது குறித்து ரோஹித் சர்மா பேசியிருக்கிறார். மே 26ஆம் தேதியுடன் ஐபிஎல் 17ஆவது சீசன் நிறைவுபெற்ற உடன், ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இருக்கிறது. இதற்கான, இந்திய அணியைத் தேர்வு செய்யும் பணியும்  நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கில்கிறிஸ்ட் மற்றும் வாஹன் இணைந்து நடத்தி வரும் பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரோஹித் சர்மா, ‘Impact Player’ விதிமுறை, ரிஷப் … Read more