ஊத்துக்குளி வெண்ணை தொழிலுக்கு வந்த சிக்கல்

உலக புகழ்பெற்று விளங்கும் ஊத்துக்குளி வெண்ணை உற்பத்திக்கு தேவையான எருமைப் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு வருவதால்,வெண்ணை உற்பத்தி தொழிலே அழிந்து வருவதாக ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாரம்பரியமான வெண்ணை உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வந்த எருமைகளை விவசாயிகள் வளர்ப்பதை குறைத்தும், வளர்க்கும் எருமைகளை விற்பது அதிகரித்து வருவதால், ஊத்துக்குளியின் பெயரை உலக புகழ்பெற வைக்க காரணமாக இருந்த எருமை வெண்ணை உற்பத்தி முழுவதுமாக அழியும் நிலையை எட்டி உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் … Read more

UPI பண பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்: ரிசர்வ் வங்கி சூசகம்

UPI charges as IMPS: UPI ஐப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வது என்பது IMPS போன்றது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது, எனவே இனி அதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம். யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பதன் சுருக்கமான UPI, இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கார்டு மூலம் பணத்தை செலுத்துவதற்கு மாற்றாகவும், டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான மற்றொரு தெரிவாகவும் தொடங்கப்பட்ட UPI இப்போது இந்தியாவிற்கு வெளியிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிரது. இதுவரை இலவசமாக பயன்படுத்தப்பட்ட இந்த வசதிக்கு இனி மேல் … Read more

மும்பையில் ஸ்கூட்டரில் ஜாலியாக ரைட் போன விராட் – அனுஷ்கா சர்மா: video

பிரபலமாக இருந்தாலும், ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும், சாலையோர கடைகளில் உணவருந்த வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருக்கத் தான் செய்யும். ரசிகர்கள் கூடிவிட்டால் அது பிரச்சனையாகிவிடும் என்பதற்காகவே அப்படியான தங்களின் ஆசைகளில் செய்யாமல் இருக்கும் பிரபலங்களுக்கு மத்தியில், விராட் கோலியும் – அனுஷ்கா சர்மாவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்கள். தங்களுக்கு என்னவெல்லாம் ஆசையாக இருக்கிறதோ, அதனை ஏதாவது ஒரு விதத்தில் செய்துவிட வேண்டும் என்பது தான் அவர்களின் இலக்கு. இருவருக்கும் ஜோடியாக ஒரு ஸ்கூட்டரில் மும்பை நகரத்தில் … Read more

அடம் பிடித்து நாடகம் ஆடும் ஆளுநர் – சிபிஎம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இதுவாகும். குஜராத், தெலங்கானா மாநிலங்களில் துணை வேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. அங்கு UGC விதிமுறைகளின்படியே நியமனங்கள் நடக்கின்றன. அதையே தமிழ் நாட்டிலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. … Read more

பூஜையுடன் துவங்கிய சூர்யா 42 படப்பிடிப்பு; வெளியானது முக்கிய தகவல்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளள அவரது 42வது படத்தின் பூஜை இன்று காலை சென்னை ராமாபுரத்தில் பூஜையுடன் துவங்கியது. அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படம் 2 பாகங்களாக தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. சூர்யா, சிவா, மோகன்லால், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் சூர்யாவை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். சூர்யா 42 படம் மூலம் பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி தமிழ் … Read more

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மதுரை அல்லாது சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி என ஒட்டுமொத்த தென் தமிழகத்திற்கும் மருத்துவ தலைநகரமாக விளங்கக்கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இக்கட்டடம் 1984ல் கட்டப்பட்டது.   சில ஆண்டுகளாக கட்டடத்தின் சுவர் பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு 90வது வார்டின், ஆப்பரேஷன் தியேட்டர் மேற்கூரையின், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதில் … Read more

உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் கரடிகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கரடிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. கரடிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. கரடிகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. கரடியை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை … Read more

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட்நோட்டீஸ்

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரில், கலால் துறையைக் கையாளும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட 1 இடங்களில் சிபிஐ கடந்த வெள்ளிக்கிழமை (19.08.22) சோதனை நடத்தியது சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில், மணீஷ் சிசோடியா முதல் நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டெல்லி துணை முதலமைச்சர் … Read more

யாஷிகாவின் வேற லெவல் வொர்க் அவுட்- வீடியோ செம வைரல்

யாஷிகா ஆனந்த் லெவல் வொர்க் அவுட் வீடியோ: ஜீவா – காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதை அடுத்து இருட்டறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி, தி லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் களமிறக்கி கதிகலங்க வைத்து வருகிறார். கார் விபத்துக்கு பிறகு 3 மாதங்கள் ஓய்வில் இருந்த யாஷிகா மீண்டும் பழையபடி கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவசாமியும் அவருடைய மனைவி முத்துமாரியும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்மநபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கம்பு, கற்களால் வைரவசாமியை சரமாரியாக தாக்கி விட்டு, முத்துமாரி அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.  இதில் பலத்த காயமடைந்த … Read more