ரணிலால் டொலரின் விற்பனை விலை குறைந்ததா – வெளியான தகவல்

 அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று கணிசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாளாந்த நாணய மாற்று விகித அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவான இன்று பதிவாகியிருந்தது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை விலை குறைவடைந்தமை தொடர்பில் பல்வேறு அனுமானங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நாணய மாற்று விகிதத்தின் இடைக்கால … Read more

வடரெக சிறைக் கைதிகள் மீதான தாக்குதல்: நீதி கோரி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் முறைப்பாடு

வடரெக சிறைச்சாலையின் கைதிகளையும் அவர்களின் பாதுகாப்பிற்கு வந்த சிறைச்சாலை அதிகாரிகளையும் கடந்த 05.09.2022 அன்று மாலபே தலாஹேன பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், சிறைச்சாலை உடமைகளுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நேற்று (12) பொலிசாரிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 9ஆம் திகதி, வடரெக சிறைச்சாலையில் இருந்த கைதிகளை அவர்களது பணியிடங்களுக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டக்காரக் … Read more

ஜனாதிபதி பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது – ரணில் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேலை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. இந்நிலையில், … Read more

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தோரை அடையாளம் காண நடவடிக்கை

அமைச்சர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் தீயிட்டுக் கொழுத்தியவர்களை கைது செய்வதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சந்தேக நபர்களை சிசிரிவி காட்சிகளின் மூலம் அடையாளங்காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்

ஊரடங்கு உத்தரவு: சனி மாலை 6 முதல் ஞாயிறு அதிகாலை 5 மணி வரை

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (14) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது. மீண்டும் நாளை சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (14) அறிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் ,அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது … Read more

ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழு ஆதரவு – மகிந்த கட்சி அறிவிப்பு

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கட்சியின் சுதந்திரத்தை பாதுகாத்து புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரச தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரச தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று (13) காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது. கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார். “நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், துறைகள், மத்திய … Read more

வனிதா – தேவயாணி இடையே மோதல்! கடும் கோபத்தில் வனிதா செய்த விஷயம்

நடிகை தேவயானி ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அதற்கு பிறகு சின்னத்திரையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அவரது தொடர்கள் ஹிட் ஆகி வருகின்றன. தற்போது தேவயாணி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வனிதா உடன் மோதல் தேவயாணி பணியாற்றிவரும் எப்எம் சேனலில் ஒரு பேட்டி கொடுப்பதற்காக நடிகை வனிதா வருகிறார். அந்த பேட்டிகான கேள்விகளை தேவயானி தான் எழுதி கொடுக்கிறார். வனிதாவின் சொந்த … Read more